scorecardresearch

அதிர்ச்சி வீடியோ: பெண்ணின் படுக்கை அறையில் விழுந்த இணை மலைப்பாம்புகள்!

சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பெண் அந்த பாம்புகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மலைப்பாம்புகள்
மலைப்பாம்புகள்

ஆஸ்திரேலியாவில் இணை சேர்ந்த மலைப்பாம்புகள் பெண்ணின் படுக்கை அறையில் விழுந்த  வீடியோ பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பாம்புகள்:

பொதுவாக மலைப்பாம்புகள்  என்றாலே  பலருக்கும் பயம்.  இந்நிலையில் இணை சேர்ந்த மலைபாம்புகளை  பெண் ஒருவர் நேரில் பார்த்து திகைத்துள்ளார்.  ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் புறநகரில் வனப்பகுதியில் வசித்து வரும் பெண்ணின் வீட்டில் இரண்டு மலைப்பாம்புகள்  நுழைந்துள்ளனர்.

மரத்தினால் செய்யப்பட்ட வீடு என்பதால் பாம்புகளின் எடையைத் தாங்க முடியாமல் மரச்சட்டம் முறிந்ததில் இரு பாம்புகளும் அந்தப் பெண்ணின் படுக்கை அறைக்குள் விழுந்தன. சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பெண் அந்த பாம்புகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்த பாம்புகள் இரண்டும் இணை சேர்ந்து ஒன்றாக ஆடிக் கொண்டிருந்தனர்.   இதனைப் பார்த்த அந்த பெண், செல்போன் மூலம் வீடியோ எடுத்து அதனை தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டார்.  இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Two fighting pythons falling into bedroom