/indian-express-tamil/media/media_files/2025/09/03/dubai-1-million-2025-09-03-20-00-29.jpeg)
10 சக ஊழியர்கள் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வென்றனர்
துபாய் டியூட்டி ஃப்ரீ குலுக்கல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ) வசிக்கும் இந்தியப் புலம்பெயர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுத்துள்ளது. இரண்டு தனித்தனி குழுக்கள் தலா 1 மில்லியன் அமெரிக்க டாலர் வென்றுள்ளனர்.
10 சக ஊழியர்கள் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வென்றனர்
கேரளாவைச் சேர்ந்த 56 வயது எட்டியானிக்கல் பைலிபாபு, மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 513-ல் 3068 என்ற டிக்கெட் எண்ணுடன் 1 மில்லியன் அமெரிக்க வென்றார். துபாய் சர்வதேச விமான நிலையத்தின் கான்கோர்ஸ் ஏ-யில் புதன்கிழமை அன்று இந்த குலுக்கல் நடைபெற்றது. கடந்த 16 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் மற்றும் ஒரு தள மேற்பார்வையாளராக பணிபுரியும் பைலிபாபு, ஆகஸ்ட் 18 அன்று ஆன்லைனில் இந்த டிக்கெட்டை வாங்கினார்.
அவர் 1 மில்லியன் டாலரை 9 சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இவர்களும் டிக்கெட்டின் விலை ஏ.இ.டி (AED) 1000-க்கு (ரூ. 24,000) பங்களித்துள்ளனர். பைலிபாபுவின் கருத்துப்படி, அவரும் அவரது சக ஊழியர்களும் துபாய் டியூட்டி ஃப்ரீ விளம்பரங்களில் தொடர்ந்து பங்கேற்று, டிக்கெட்டுகளில் தங்கள் பெயர்களைப் போடுவதற்கு முறை வைத்துக்கொள்வார்கள்.
Two groups of colleagues each won 𝐔𝐒$𝟏 𝐦𝐢𝐥𝐥𝐢𝐨𝐧 in the Dubai Duty Free Millennium Millionaire draw! Ettiyanikkal Pailybabu plans a new business in Kerala, while Gopi Devarajan will invest in his children’s future. Plus, two lucky players drove away a Land Rover 🚙 and an… pic.twitter.com/JQhlhbdRIv
— Dubai Duty Free (@DubaiDutyFree) September 3, 2025
புதிதாகக் கிடைத்த இந்த பணத்தை வைத்து, இரண்டு குழந்தைகளின் தந்தையான பைலிபாபு, "நான் அநேகமாக கேரளாவுக்கு திரும்பிச் சென்று ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்குவேன்," என்று கூறினார்.
நான்கு பேர் கொண்ட குழு மில்லியனர்களாக மாறியது
மற்றொரு இந்தியக் குழுவும் புதன்கிழமை துபாய் டியூட்டி ஃப்ரீ குலுக்கலில் மில்லியனர்களாக மாறினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 46 வயது கோபி தேவரஜன், ஆகஸ்ட் 14 அன்று ஆன்லைனில் வாங்கிய மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 514-ல் 1978 என்ற டிக்கெட் எண்ணுடன் வென்றார். ஷார்ஜாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மேலாளராக பணிபுரியும் தேவரஜன், மூன்று சக ஊழியர்களுடன் டிக்கெட்டைப் பகிர்ந்து கொண்டார்.
2009-ம் ஆண்டு முதல் துபாய் டியூட்டி ஃப்ரீ குலுக்கலில் தொடர்ந்து பங்கேற்று வரும் தேவரஜன், அவரும் அவரது மூன்று சக ஊழியர்களும் கடந்த ஏழு ஆண்டுகளாக டிக்கெட்டுகளின் செலவைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
தனது வெற்றியை "நம்பமுடியாதது" என்று விவரித்த தேவரஜன், "நான் இதை என் குழந்தைகளின் கல்விக்காக சேமிப்பேன். மேலும் ஒரு வீடு வாங்கி ஒரு சிறிய வணிகத்தையும் தொடங்கலாம்," என்று கூறினார்.
1999-ம் ஆண்டு முதல் 258 இந்திய மில்லியனர்கள்
1999-ம் ஆண்டு மில்லினியம் மில்லியனர் விளம்பரம் தொடங்கப்பட்டதிலிருந்து, பைலிபாபு மற்றும் தேவரஜன் ஆகியோர் முறையே 257 மற்றும் 258-வது இந்திய குடிமக்களாக $1 மில்லியனை வென்றவர்கள் ஆவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.