Advertisment

மருத்துவத்தை நேசித்த அப்பா, மகள் : கொரோனாவுக்கு பலியான மருத்துவர்கள்!

சத்யேந்திர தேவ் கண்ணா மற்றும் பிரியங்கா கண்ணா தங்களின் வாழ்வினை மற்றவர்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணித்துள்ளனர் - நியூ ஜெர்ஸி ஆளுநர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Two Indian-origin doctors, a father and daughter, died of COVID-19 while treating infected patients

Two Indian-origin doctors, a father and daughter, died of COVID-19 while treating infected patients

கொரோனா வைரஸ் மருத்துவத் துறையை சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்ஸியை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர்கள் இருவர் கொரானா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவர்களிருவரும் தந்தை மற்றும் மகள் ஆவார்கள்.

Advertisment

நேற்று அவர்களுக்கு இறுதி அஞ்சலியும், அரசு மரியாதையும் அளிக்கப்பட்டது.அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து பேசிய நியூஜெர்ஸி கவர்னர் பில் முர்ரே “சத்யேந்திர தேவ் கண்ணா மற்றும் பிரியங்கா கண்ணா தங்களின் வாழ்வினை மற்றவர்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் இருவரையும் கொரோனா நோய்த்தொற்றுக்கு நாம் பறிகொடுத்து விட்டோம். நாம் அனைவரும் இந்த துக்கமான நிகழ்வில் அவர்கள் குடும்பத்தாருடன் இணைந்து இருப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க : ”உணவில்லாமல் செத்துவிடுவோம் போல் இருக்கிறது” ரயில் விபத்தில் இறந்த தொழிலாளியின் கடைசி போன் கால்!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களில் மிக முக்கியமான ஒருவர் சத்யேந்திர கண்ணா. அவர் பல்வேறு மருத்துவமனைகளில் பணி புரிந்த அவர் கடந்த 35 ஆண்டுகளாக Clara Maass Medical Center-ல் அறுவை சிகிச்சை நிபுணராக பணி புரிந்து வந்தார். 1964 ஆம் ஆண்டு புது டெல்லியில் உள்ள மவுலானா ஆசாத் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார்.

மேலும் படிக்க : துபாய் டூ சென்னை சிறப்பு விமானம்: ஸ்கிரீனிங்கிற்கு பிறகு குவாரண்டைனில் பயணிகள்

அவருடைய மகள் பிரியங்கா கண்ணாவும் Clara Maass Medical Center மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் தன்னுடைய மருத்துவ பட்டத்தை 2003 ஆம் ஆண்டு கன்சாஸ் சிட்டி ஸ்கூல் ஆப் மெடிசினில் பெற்றார். அவருக்கு தான் முதலில் கொரொனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என்று அவருடைய தங்கை ட்விட்டரில் பதிவிட, ஒரே நாளில் ப்ளாஸ்மா டோனர் கிடைத்தார். இருப்பினும் ஏப்ரல் 13ம் தேதி அன்று பிரியா கண்ணா உயிரிழந்தார். அவருடைய தந்தை ஏப்ரல் 21ஆம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment