இந்த சந்திப்பு நடந்ததற்கு காரணம் அந்த 2 தமிழர்கள்... யார் அவர்கள்?

இந்த சந்திப்பு நிகழ்ந்தது வரை ஓட்டு மொத்த மீடியாவின் பார்வையும் இவர்கள் இருவரின் பக்கம் தான்.

சிங்கப்பூர் அரசின் அமைச்சரவையில் உள்ள தமிழர்களான விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம் என்ற இருவரும் இந்த இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளனர். இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது சாத்தியம் என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் இவர்கள் இருவரும் தான்.

அப்படி என்ன சந்திப்பு என்று யோசிக்கிறீர்களா? அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் இருவருக்கும் இடையிலான சந்திப்பு தான். இந்த நிகழ்வு  சிங்கப்பூரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து,  12.6.18 அன்று இந்த சந்திப்பு நிகழ்ந்தது வரை ஓட்டு மொத்த மீடியாவின் பார்வையும் இவர்கள் இருவரின் பக்கம் தான்.

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் சிறந்த நட்பு நாடுகளாக ஒரு சில நாடுகள்தான் இருக்கின்றன. அதில் சிங்கப்பூர் மிகவும் முக்கியமாகும். அதனால்தான் இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் இந்த சந்திப்பிற்கு மறுப்பு தெரிவித்தவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான். தன்னிச்சையாக சந்திப்பை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார்.

உடனே, வாஷிங்டனுக்குச் சென்று டிரம்பை சமாதானம் செய்து, இறுதியாக இரு துருவங்களை சந்திக்க வைத்து, அதை வெற்றிக்கரமாக செய்து காட்டியவர் பாலகிருஷ்ணன் தான்.

 

டாக்டர் பாலகிருஷ்ணன்

யார் இந்த பாலகிருஷ்ணன்?

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் தான் விவியன் பாலகிருஷ்ணன். ஜூன் 12ல் சிங்கப்பூரில் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று திட்டமிட்ட உடனே, சீனாவின் பெய்ஜிங் நகருக்கும் தீவிரமாக பயணித்துச் சந்திப்பை முழுமை பெறச் செய்தார். அதனைத்தொடர்ந்து வாஷிங்டனுக்கும் சென்று டிரம்பின் முழு சம்மதத்தையும் வாங்கினார். சிங்கப்பூர் மக்கள் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஒரு டாக்டரும் கூட. 57-வயதான பாலகிருஷ்ணன் கண்பார்வை சிகிச்சையில் முதுநிலைப்பட்டம் பெற்றவர். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களுக்கும் பரிமாறப்பட்ட உணவு கூட இவரின் அறிவுரையின் கீழே பட்டியலிடப்பட்டது. இந்திய உணவு வகைகள் புலாவ், மீன், சிக்கன், பருப்பு, சிக்கன் குருமா, அப்பளம் உள்ளிட்ட 41 வகையான உணவுகள் சிங்கப்பூர் அரசு சார்பில் பரிமாறப்பட்டன. இந்த சந்திப்புக்கு தேவையான அனைத்துச் செலவுகளையும் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சர் சண்முகம்

உள்துறை அமைச்சர் சண்முகம்:

சிங்கப்பூர் அரசில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருக்கும் சண்முகத்திற்கு சிங்கபூர் அரசு வழங்கிய மிக முக்கியமான பொறுப்பு என்னவென்றால் சிங்கப்பூரில் இருநாட்டு தலைவர்களும் தரையிறங்கிய பின்பு அவர்களுக்குக்கான பாதுகாப்பு அளிப்பது, தங்குமிடங்கள், சந்திப்பை சுமூகமாகக் கொண்டு செல்வது என இவை அனைத்தும் தான். அதை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார் சண்முகம். சாங்கி விமான நிலையத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் , அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரை வரவேற்று ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதில் தொடங்கி, அவர்களை திரும்பி சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தது வரை சண்முகம் அவர்களுடன் விடாமல் பயணித்துக் கொண்டே இருந்தார். 5 ஆயிரம் போலீஸார், உள்துறை அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டது சண்முகம் தான்.

உலகம் முழுவதும் இருந்து 2,500 பத்திரிகையாளர்கள் சிங்கப்பூரில் குவிந்தனர். அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடங்களையும் சண்முகம் கச்சிதமாக ஏற்பாடு செய்திருந்தார். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நேலையில் குறைந்த 3 ஆயிரம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டது. அதற்கு சிங்கபூர் அரசும் முழு ஒத்துழைப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், வடகொரியாவின் அதிபர் என கிம் ஜான் உன், வரலாற்று சந்திப்பிற்குன் பின்புலத்தில், சிங்கப்பூரில் இருக்கும் இரண்டு தமிழர்களின் உழைப்பு இருக்கிறது என்பது உலகம் முழுவதும் வாழும் ஓட்டுமொத்த தமிழர்களை பெருமைப்பட வைத்துள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை.

×Close
×Close