அமீரகம் போல் செயல்பட வேண்டும்... ஊரடங்கை மீறினால் தண்டனை என்ன தெரியுமா?
இந்த தண்டனையை இந்தியாவில் விதித்தால் பொதுமக்கள் பலரும் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிப்பார்கள் என்று பலரும் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயின் பரவலைத் தடுக்க தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் ஊரடங்கு உத்தரவு தான் இந்த நோய் பரவலை தடுக்கும். பல்வேறு நாடுகளும் மக்களை வீட்டிற்குள் இருக்க சொல்லி கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் 25 ஆம் தேதியில் இருந்து 21 நாட்களுக்குள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு வெளியே வந்தால் மட்டும் போதும். இதர காரணங்களுக்கு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை செய்திருந்தது.
ஆனாலும் பலர் தங்கள் வாகனங்களில் இங்குமங்கும் உலாவிக் கொண்டுதானிருக்கிறார்கள். காவல்துறையினர் தங்களால் இயன்ற அளவிற்கு மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் இதையும் மீறி பல்வேறு இடங்களில் சுற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா, எகிப்து, சவுதிஅரேபியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது.
அமீரகத்தில் உத்தரவை மீறி அவசியமற்ற காரணங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறினால் கடுமையான தண்டனைகள் தரப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் இந்திய மதிப்பில் ரூபாய் 76 லட்சம் வரையிலான அபராதமும் விதித்து அறிவித்துள்ளது. இந்த தண்டனையை இந்தியாவில் விதித்தால் பொதுமக்கள் பலரும் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிப்பார்கள் என்று பலரும் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”