கணவரின் அதீத அன்பை தாங்க முடியவில்லை; விவாகரத்து கோரும் மனைவி

UAE Woman Seeks Divorce: ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒரு பெண் தனது கணவர் அளவுக்கு அதிகமான அன்புடனும் காதலுடனும் இருக்கிறார் இதை என்னால் தாங்கிக்கொள்ள...

Woman Seeks Divorce because Extreme Love: கணவன் மனைவிக்கு இடையேயான பல விவாகரத்துகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு, அதனால் ஏற்படும் சண்டை ஆகியவற்றால் ஏற்பட்டுவருகின்றன. ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒரு பெண் தனது கணவர் அளவுக்கு அதிகமான அன்புடனும் காதலுடனும் இருக்கிறார் இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறி விவாகரத்து கோரியுள்ளார். இது உலக அளவில் பலருடைய கவனத்தை பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் ஃபுஜாரியாவில் உள்ள ஷரியா நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
நீதிமன்றத்தில் அந்த பெண் தனது கணவர் என் மீது கோபப்பட மாட்டேன் என்கிறார் என்று கூறியுள்ளார். நான் அவருடைய அதீத அன்பாலும் காதலாலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அவர் வீட்டை சுத்தம் செய்வதில் இருந்து எல்லா வேலைகளிலும் எனக்கு உதவி செய்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் எப்போதும் அன்பாகவும் தன்னுடைய வார்த்தகளை அவர் மறுத்து பேசுவதில்லை என்றும் அவர் தன்னுடன் சண்டை போடுவதில்லை என்றும் இது மிகவும் சிக்கலாக இருக்கிறது.

“அவர் ஒரு நாள் என்னுடன் சண்டையிட மாட்டாரா என்று ஏங்குகிறேன். ஆனால், அது சாத்தியமே இல்லை என்று தெரிகிறது. என் காதல் கணவர் எப்போதும் என்னை மன்னித்துவிடுகிறார். எனக்கு எதிர்பாராதவிதமாக பரிசுகளை வழங்கி என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறார்” என்று கூறுகிறார்.

“எனக்கு உண்மையில் ஒரு சிறிய சண்டை தேவை. எதிர்த்து ஒரு வாதமும் செய்யாமல் இப்படி நான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பது, இந்த தொந்தரவில்லாத வாழ்க்கை தேவை அல்ல.” என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த பெண் தனது கனவரைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் மிகவும் ஒரு நல்ல அன்பான கணவர் என்று தெரிவித்துள்ளார். அவர் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று கூறினேன். அதற்காக அவர் உடற்பயிற்சி செய்ய சென்று கால் உடைந்தது என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கை திரும்பபெறுமாறு தனது மனைவிக்கு அறிவுறுத்துமாறு அந்த கணவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இருப்பினும் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருமணமாகி முதல் ஆண்டிலேயே விவாகரத்து செய்வது முறையல்ல என்றும் எல்லோரு தங்களுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள் என்று அந்த கணவர் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close