லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்; தேசியக் கொடியை அகற்றிய காலிஸ்தான் போராட்டக்காரர்கள்

காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்களால் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தூதரக பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக் கொள்வதாக இங்கிலாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

Khalistan, UK high commission, tricolour pulled own, uk indian high commission security, london indian high commission security, uk tricolour pulled down, uk pro-khalistan protests, uk pro-khalistan slogans, uk india relations
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள்

காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்களால் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தூதரக பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக் கொள்வதாக இங்கிலாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

“பிரிட்டிஷ் போலீசார் தங்கள் கடமையில் முற்றிலும் தவறிழைத்திருந்தால், இந்த முட்டாள்தனத்தை அவர்கள் அனுமதித்திருந்தால், இது எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு பெரிய அவமானம்” என்று காங்கிரஸ் எம்.பி, சசி தரூர் கூறியுள்ளார்.

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை எப்போதும் இங்கிலாந்து அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் தாரிக் அஹமது கூறினார்.

“போராட்டக்காரர்களின் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்தது என்றும் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும், இப்போது மூவர்ணக் கொடி பிரமாண்டமாக பறந்து வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு பாதுகாப்பு ஊழியர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படாத அளவுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

“இந்திய தூதரகத்தின் கட்டிடத்தில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது. “அதிகாரிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டனர். போலீசார் வருவதற்கு முன்பே அங்கிருந்தவர்களில் பெரும்பாலோர் கலைந்து சென்றனர். விசாரணை தொடங்கப்பட்டது, வன்முறை சீர்குலைவு என்ற சந்தேகத்தின் பேரில் சிறிது நேரம் கழித்து ஒரு நபர் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் தொடர்கின்றன” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது, இது பெரிய அவமானம் என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறினார். “உண்மையான பிரச்சனை தூதரகத்திற்குள்ளே இல்லை. ஆனால் வெளிப்புற வளாகத்தில் உள்ளது. இது உள்ளூர் அதிகாரிகளின் பொறுப்பாகும், இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள், பாதுகாக்க வேண்டும். பிரிட்டிஷ் காவல்துறை தங்கள் கடமையில் முற்றிலும் தவறிழைத்திருந்தால், இந்த முட்டாள்தனத்தை அவர்கள் அனுமதித்திருந்தால் இது எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு பெரிய அவமானம்” என்று சசி தரூர் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த லண்டன் மேயர் சாதிக் கான், நடந்த வன்முறை சீர்குலைவு மற்றும் தாக்குதல்களைக் கண்டிப்பதாக கூறினார். இதுபோன்ற நடத்தைக்கு எங்கள் நகரத்தில் இடமில்லை என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் இந்த சம்பவத்தை “அவமானகரமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறினார்.

மூத்த இங்கிலாந்து தூதரக துணை உயர் ஆணையர் கிறிஸ்டினா ஸ்காட்டை வரவழைத்து, ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்திற்கு எதிராக இந்தியா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.

“இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக வளாகங்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியது. இங்கிலாந்து அரசாங்கம் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் கண்டு, கைது செய்து, வழக்குத் தொடர உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Uk indian high commission security vandalism by pro kalistan protesters

Exit mobile version