/tamil-ie/media/media_files/uploads/2020/04/95419868_290023515322218_8861779292671627158_n.jpg)
UK Prime Minister Boris Johnson his fiancee Carrie Symonds welcomed a baby boy
UK Prime Minister Boris Johnson his fiancee Carrie Symonds welcomed a baby boy : கொரோனா வைரஸ் காலத்தின் போது மிகவும் அதிகமாக பேசப்பட்ட நபர் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனாக தான் இருப்பார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார். பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு, மீண்டும் ஓய்வு எடுத்தார்.
இறுதியாக இந்த வாரத்தின் துவக்கத்தில் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இருக்கும் பிரதமர் அலுவலகத்தில், கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னை இணைத்து கொண்டு மீண்டும் அலுவலக பணிகளை மேற்கொண்டார். இத்தனை சச்சரவுகளுக்கும், இக்கட்டான சூழல்களுக்கும் மத்தியில் அவருக்கு கிடைத்த நற்செய்தியாக அமைந்திருக்கிறது அவருடைய மகனின் வரவு.
மேலும் படிக்க : கொரோனாவுக்கு எதிரான போர் : பணிக்கு திரும்பிய இங்கிலாந்து பிரதமர்!
போரீஸ் ஜான்சனுக்கும், அவருடைய வருங்கால மனைவியான கேரி சைமண்ட்ஸ்க்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து "பிரதமரின் செய்தி தொடர்பாளர் பேசுகையில் தாயும் சேயும் நலமாக இருக்கின்றார்கள்" என்று கூறியுள்ளார். சிறப்பான முறையில் பணியாற்றி, இருவரையும் நலமுடன் காப்பாற்றியுள்ள தேசிய மருத்துவ மையத்தின் பேறுகால குழுவிற்கு பிரதமரும், கேரியும் நன்றி கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.