Advertisment

ஊழலில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா

போரிஸ் ஜான்சன் இனி ஆட்சியமைக்க தகுதியற்றவர் எனக் கூறி அமைச்சர்கள் மற்றும் அவரது கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.க்கள் அவரைக் கைவிட்ட பிறகு, போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
boris johnson, boris johnson resigns, boris johnson news, boris johnson in trouble today, news uk pm, போரிஸ் ஜான்சன் ராஜினாமா, போரிஸ் ஜான்சன், ஊழலில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா, UK Prime Minister Boris Johnson resignation, uk prime minister, boris johnson cabinet, boris johnson updates, todays news, world news

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன் இனி ஆட்சியமைக்க தகுதியற்றவர் எனக் கூறி அமைச்சர்கள் மற்றும் அவரது கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.க்கள் அவரைக் கைவிட்ட பிறகு, போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

Advertisment

இரண்டு மாநிலச் செயலாளர்கள் உட்பட எட்டு அமைச்சர்கள் கடந்த இரண்டு மணி நேரத்தில் ராஜினாமா செய்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு, பலமிழந்துள்ள போரிஸ் ஜான்சன் தவிர்க்க முடியாமல் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு அறிக்கை வெளியிடுவார் என்று அவரது டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

போரிஸ் ஜான்சன் தனது பதவிக்காக பல நாட்கள் போராடிய பிறகு, ஒரு சில கூட்டணி கட்சிகளைத் தவிர மற்ற அனைவராலும் ஜான்சன் கைவிடப்பட்டார்.

கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவர் ஜஸ்டின் டாம்லின்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அவருடைய ராஜினாமா தவிர்க்க முடியாதது” என்று தெரிவித்துள்ளார். “ஒரு கட்சியாக நாம் விரைவாக ஒன்றிணைந்து முக்கியமானவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இவை பல முனைகளில் தீவிரமான நேரமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியினர் இப்போது ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான செயல்முறைக்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆகலாம். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, போரிஸ் ஜான்சன் காபந்து பிரதமர் பொறுப்பில் நீடிப்பாரா அல்லது நீடிக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

“கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதுடன், தனது பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கன்சர்வேட்டிவ் எம்.பி நிக் கிப் கூறினார். மேலும், “பல அமைச்சர்களை இழந்த பிறகு, அவர் பதவியில் தொடர தேவையான நம்பிக்கையையும் அதிகாரத்தையும் இழந்துவிட்டார்.” என்று தெரிவித்தார்.

போரிஸ் ஜான்சனுக்கான ஆதரவு எல்லாம், சமீபத்திய பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான 24 மணி நேரத்தில் காணாமல் போய்விட்டது. நிதியமைச்சர் நாதிம் ஜஹாவி மட்டும் அவருடைய பதவிக்கு செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் தனது தலைமையை ராஜினாமா செய்ய அழைப்பு விடுத்தார்.

ஜஹாவி மற்றும் பிற கேபினட் அமைச்சர்கள் புதன்கிழமை மாலை டவுனிங் தெருவுக்குச் சென்றனர். அரசாங்கத்தில் எம்.பி.க்களின் மூத்த பிரதிநிதிகள் இல்லை என்பது போரிஸ் ஜான்சனின் ஆட்டம் முடிந்தது என்பதைக் கூறுகிறது.

ஆரம்பத்தில், போரிஸ் ஜான்சன் பதவி விலக மறுத்து, நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். மைக்கேல் கோ-வை பதவி நீக்கம் செய்தார். அவர் போரிஸ் ஜான்சனின் உயர்மட்ட அமைச்சரவைக் குழுவில் இருந்தவர். போரிஸ் ஜான்சன் தனது பதவியை உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இருந்தபோது, ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதலில் கூறியவர்களில் ஒருவர்.

ஆனால், வியாழக்கிழமை காலைக்குள் ராஜினாமாக்கள் குவிந்ததால், அவரது நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது தெளிவாகியது.

“இது நிலையானது அல்ல, இது உங்களுக்கும், உங்கள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், முக்கியமாக மொத்த நாட்டுக்கும் மோசமானதாகிவிடும்” என்று ஜஹாவி ட்விட்டரில் கூறினார். “இப்போது நீங்கள் சரியானதைச் செய்துவிட்டுப் போக வேண்டும்.” என்று ஜஹாவி குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் உட்பட பதவியில் இருந்தவர்களில் சிலர், நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கடமை இருப்பதால் மட்டுமே அவ்வாறு செய்கிறோம் என்று கூறினார்.

பல அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால், காலியாக உள்ள பதவிகளை யாரும் ஏற்கத் தயாராக இல்லாத நிலையில் அரசாங்கம் முடங்கிக் கிடக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போரிஸ் ஜோன்சன் ஆட்சிக்கு வந்தார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதையும், 2016 பிரெக்சிட் வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கசப்பான சண்டையிலிருந்து அதைக் காப்பாற்றுவதாகவும் உறுதியளித்தார்.

அப்போதிருந்து, சில கன்சர்வேடிவ்கள் முன்னாள் பத்திரிகையாளரும் முன்னாள் லண்டன் மேயருமான அவரை உற்சாகமாக ஆதரித்தனர். மற்றவர்கள், தனி விருப்பம் இருந்தபோதிலும், வழக்கமாக தங்கள் கட்சியை நிராகரிக்கும் வாக்காளர்களின் சில பகுதிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்ததால் அவருக்கு ஆதரவளித்தன.

அந்த ஆதரவு டிசம்பர் 2019 தேர்தலில் உறுதியானது. ஆனால், அவரது நிர்வாகத்தின் மோதல் மற்றும் அடிக்கடி குழப்பமான ஆட்சி அணுகுமுறை மற்றும் தொடர்ச்சியான ஊழல்கள் அவரது எம்.பி.க்கள் பலரின் நல்லெண்ணத்தை அழித்துவிட்டன. அதே நேரத்தில், கருத்துக் கணிப்புகள் அவர் பொதுமக்களிடம் பிரபலமாக இல்லை என்பதைக் காட்டுகிறது.

போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பிரிட்டனுக்கு நல்ல செய்தி என்று எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.

“ஆனால், இந்த ராஜினாமா நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார். “அவர் எப்போதும் பதவிக்கு தகுதியற்றவர். தொழில்துறை அளவில் பொய்கள், ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு அவர் பொறுப்பேற்றுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Boris Johnson England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment