இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கு உக்ரைன் கண்ணாடி போன்றது என்று சீன வெளியுறவு துணை அமைச்சர் லீ யுசெங் தெரிவித்தார்.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசிய-பசிபிக் இரண்டு எதிரெதிர் விருப்பங்களை கொண்டுள்ளது. ஒன்று நாம் ஒன்றிணைந்து இந்தப் பிராந்தியத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வது மற்றொன்று சில குழுக்களை உருவாக்கிக் கொண்டு அதற்கு தடையை ஏற்படுத்துவது எது வேண்டும்?
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சிறு சிறு குழுக்களை உருவாக்கிக் கொள்வது ஆபத்தில் போய் முடியும்.
நேட்டோ நாடுகள் ஐரோப்பாவின் கிழக்கு பகுதியை விரிவுப்படுத்த முயற்சி நடப்பது போல் ஆகிவிடும்.
இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்திவிடும். இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஆபத்தில் விளிம்பில் கொண்டு நிறுத்திவிடும்.
பெய்ஜிங்கில் உள்ள டிசிங்ஹுவா பல்கலைக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் உத்திசார் 4ஆவது சர்வதேச மாநாட்டில் பேசும்போது லீ இதனை தெரிவித்தார்.
எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் பாதுகாப்பின் கீழ் அதன் முழுமையான பாதுகாப்பை தொடரக் கூடாது.
நாம் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும், மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் வேண்டுமென்றே தலையிடக்கூடாது.
அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்கள்.. மொராக்கோவுக்கு இந்திய வம்சாவளி தூதர்.. மேலும் செய்திகள்
ஒவ்வொரு நாடும் அது தேர்வு வளர்ச்சிப் பாதையில் தாமே செயல்படும். அதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டாம். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சமீபத்தில் காணொளி முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீனா எப்போதுமே உக்ரைன் விவகாரத்தில் அமைதியையே விரும்புகிறது. போரை சீனா எப்போதுமே எதிர்க்கும். இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கு உக்ரைன் கண்ணாடி போன்றது என்று லீ தெரிவித்தார் என்று அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலரும், சீனாவுக்கான இந்தியத் தூதருமான விஜய் கோகலே கூறுகையில், லீயின் பேச்சு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 20 நாட்களுக்கு மேலாக போர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil