Ukraine Russia War Update In tamil : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது இந்த தாக்குதல் 2-வது வாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த போர் காரணமாக உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவின் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்து வருவதால், உக்ரைன் ரஷ்யா போர் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. போரை நிறுத்த வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையேயான முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று பெலாரஸில் நடைபெற்றது. ஆனால் இதுவும் தற்போது தோல்வியில் முடிந்துள்ள நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளை 2-வது வாரத்தை நோக்கி நகர உள்ளது. இதனால் தற்போது உலக நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பான இன்றைய முக்கிய நிகழ்வுகள் :
உக்ரைனில் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி செல்கிறது – ரஷ்ய அதிபர் புதின்
உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடப்பதாக தெரிவித்துள்ள அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட் ராணு வீரர்களை ஹீரோக்கள் என்று பாராட்டியுள்ளார். தொலைக்காட்சி வாயிலாக பேசிய அதிபர் புதின், வெளிநாட்டு மக்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கிறார்கள் மற்றும் மனித கேடயங்களைப் பயன்படுத்துகிறார்கள் என உக்ரேனியப் படைகளுக்கு எதிராக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.
உக்ரைனில் ரஷ்ய உயர்மட்ட ஜெனரல் மரணம்
உக்ரைனில் நடைபெற்று வரும் தாக்குதலில், ரஷ்யவின் 7வது வான்வழிப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி சுகோவெட்ஸ்கி கொல்லப்பட்டார். அவரது மரணம் தெற்கு ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடர் பகுதியில் உள்ள உள்ளூர் அதிகாரிகளின் அமைப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மரணத்தின் காரணங்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
47 வயதான சுகோவெட்ஸ்கி, இராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற பிறகு ஒரு படைப்பிரிவின் தளபதியாக தனது இராணுவ சேவையைத் தொடங்கினார். தொடர்ச்சியான தலைமைப் பதவிகளை பெற்று சீராக முன்னேற்றமடைந்த அவர் சிரியாவில் ரஷ்யாவின் இராணுவ பிரச்சாரத்தில் பங்கேற்றார். அவர் 41 வது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்தின் துணைத் தளபதியாகவும் இருந்தார். அவரது இறுதிச் சடங்கு நோவோரோசிஸ்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யர்களுடன் பேச்சு வார்த்தையில் மனிதாபிமான எண்ணத்துன் நடந்துகொள்ள உக்ரைன் கோரிக்கை
உக்ரேனிய நகரங்களைச் சுற்றி வளைத்து ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உக்ரைன் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில, குடிமக்களை பாதுகாப்பதற்கும் போரை நிறுத்துவதற்கும், ரஷ்ய அதிகாரிகளுடன் உக்ரைன் நாட்டை சேர்ந்த பேச்சுவார்த்தையாளர்கள் போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க கோரும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார், 30 மீட்டர் இடைவெளி இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு என்னுடன் உட்காருங்கள் என்று கூறியுள்ளார். இதில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்தபோது, மிக நீண்ட மேசையின் ஒரு முனையில் புடின் அமர்ந்திருக்கும் சமீபத்திய புகைப்படங்களைக் பதிவிட்டுள்ள ஜெலென்ஸ்கி நான் உங்களை கடிக்க மாட்டேன் நீங்கள் எதற்காக பயப்படுகிறீகள் என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்டுள்ளார்.
ரஷ்ய தன்னலக்குழுக்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக ராய்ட்டர்ஸ் தகவல்
ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதில் அளிக்கும் வகயைில், ரஷ்ய தன்னலக்குழுக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. வாஷிங்டன் ஏற்கனவே பல்வேறு தன்னலக்குழுக்களை சொத்து-தடுப்பு தடைகளுடன் தாக்கியுள்ளது. இந்த பட்டியலில, சில குறிப்பிடத்தக்க பெயர்கள் சேர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது வாரத்தில் நுழையும் உக்ரைன் போர்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான தனது படையெடுப்பை நிறுத்தப்போவதில்லை என்று கூறியுள்ளார். 2-ம் கட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் – ரஷ்யாவை சேர்நதவர்கள் இன்று சந்தித்தனர். இதில் உக்ரைன் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
உக்ரைன் மீதான ரஷ்யாவில் போர் முதல் வாரத்தை கடந்துள்ள நிலையில், உக்ரேனின் மிகப்பெரிய நகரான கிவ்யாவை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலகின் பல நாடுகளில் இருந்து கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்த கோரிக்கைகளை கவனிக்கும் மனிநலையில் புதின் இல்லை.
கிரிமியாவில் இருந்து ரஷ்ய படைவீரர்கள், முதல் நாளில் தெற்கு உக்ரேனியப் பகுதியான கெர்சனுக்குள் நுழைந்தனர். அங்கு நடைபெற்ற தாக்குதலில், 13 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது உக்ரேனிய வீரர்களும் கொல்லப்பட்டதாக கெர்சன் பிராந்திய நிர்வாகம் கூறியுள்ளது., ரஷ்யப் படை கிரிமியாவிலிருந்து பிரதான நிலப்பகுதி மற்றும் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கடக்கும் இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போரை நிறுத்த புதினுடன் நேரடி பேச்சுவார்த்தை மட்டுமே வழி - ஜெலென்ஸ்கி
ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், 'போரை நிறுத்த ஒரே வழி' ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடிப் பேச்சு வார்த்தை நடத்ததுவதுதான் என்று கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அதற்கான முயற்சிகளி்ல இறங்கியுள்ளதாக, ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.