scorecardresearch

உக்ரைன் போர் வீடியோ… சரணடையாமல் போராடும் வீரர்கள்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ராணுவ வீரர்களுடன் இணைந்து உக்ரைனியர்களும் சண்டையிட்டு வருகின்றனர். போரின் சில முக்கிய வீடியோக்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

உக்ரைன் போர் வீடியோ… சரணடையாமல் போராடும் வீரர்கள்

உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. தொடர்ச்சியாக 6 ஆவது நாளாக நீடிக்கும் போரில், உக்ரைன் வீரர்களும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.

உக்ரைன் தலைநகர் கிவ் நுழைவுவாயலில் 40 மைல் தூரத்திற்கு ரஷ்ய ராணுவ கான்வாய் நிற்கும் நிலையில், குடிமக்கள் பலரும் பாதுகாப்பிற்றாக அண்டை நாடுகளுக்கு செல்லும் காணொலிகளை காணமுடிகிறது. அதே சமயம், சிலர் தாய்நாட்டிற்காக களத்தில் இறங்கி போராடுவதையும் காண முடிகிறது. மறுபுறம், உலகம் முழுவதும் உக்ரைன் மீதான போரை நிறுத்தக்கோரி சாலையில் ரஷ்யாவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

உக்ரைனில் போர் தாக்குதலின் ஷாட் கிளிப்களை கீழே காணலாம்:

தென்கிழக்கு உக்ரைனில் உள்ள துறைமுக நகரமான பெர்டியன்ஸ்கில் வசிக்கும் மக்கள், அங்கிருந்த ரஷ்ய வீரர்களை எதிர்த்தனர். வீட்டிற்கு செல்லுங்கள் என கோஷமிட்டு, தங்களது தேசிய கீதத்தை பாடினர். ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, பெர்டியன்ஸ்க் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவில் உள்ள Independence Square பகுதியில் ஏவுகணை தாக்குதலில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. திங்களன்று கார்கிவில் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை எதிர்கொண்டது. அதில் குறைந்த 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செவ்வாயன்று டொனெட்ஸ்க் பகுதி வீடியோவை ஷேர் செய்துள்ளது. அதில், கிழக்கு உக்ரைனில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதில், அந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது. உள்ளூர்வாசி கூறுகையில், எங்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாத்திட யாரும் இங்கு இல்லை என்கிறார். வீடியோவில், எரியும் கட்டிடமும், உடைந்த ஜன்னலும், எரிந்த கார்களையும் காண முடிகிறது.

AP செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், உக்ரைனின் இன்வான்கிவ் அருகே உள்ள நீண்ட சாலை முழுவதும் ரஷ்ய படையின் கான்வாய் இருப்பதை காணமுடிகிறது. சாட்டிலைட் படங்கள், தாக்குதலின் மத்தியில் சேதமடைந்த கட்டிடங்களில் இருந்து வரும் புகை மேகங்களையும் காட்டுகின்றன.

இதற்கிடையில், கிவ்வில் ரஷ்ய ராணுவம் படையெடுப்பு அச்சுறுத்தல் இருப்பதால், பல உக்ரேனியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். ஐ.நா கூற்றுப்படி, 5,00,000 பேர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். தென்கிழக்கு போலந்தில் உள்ள Przemysl பகுதியில் வரும் அகதிகள் வரவேற்கப்படும் காட்சி வீடியோவில் உள்ளது.

பல உக்ரைனியர்கள் போலந்து மற்றும் ஹங்கேரிக்கு தப்பிச் சென்ற நிலையில், இந்திய மாணவர்கள் இன்னும் சிக்கித் தவித்து வருகின்றனர். எல்லையில், இந்திய மாணவர்கள் ராணுவ தள்ளிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெளியேற்றும் பணியை ஒருங்கிணைக்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு நான்கு மத்திய அமைச்சர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

உக்ரைன் அகதிகள் குறித்த செய்தி கவரேஜ், சமூக ஊடகங்கள் மற்றும் அரபு மற்றும் மத்திய கிழக்கு பத்திரிக்கையாளர்கள் சங்கம் ஆகியவற்றால் விமர்சனங்களை எதிர்கொண்டது. இனவெறி தன்மையை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இருப்பினும், மற்றவர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்க ஆயுதங்கள் மற்றும் ராணுவப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டு வருகின்றனர். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மோதலின் தொடக்கத்தில் ராணுவத்தின் பாதுகாப்பில் சேர விரும்பும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் என்று கூறினார். மேலும், வெளிநாட்டில் இருந்தும் தன்னார்வலர்களை அழைத்தார்.

AP பகிர்ந்த வீடியோவில், தெற்கு கிவ்வில் ராணுவப் பாதுகாப்புப் படையினர் பயிற்சி பெறுவதைக் பார்க்கலாம்.

மற்ற இடங்களில் போரை நிறுத்தக் கோரி போராட்டங்கள் தொடர்ந்தன. புடினை ஹிட்லருடன் ஒப்பிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Ukraine war videos and photos protests across world

Best of Express