Advertisment

உக்ரைன் விமானம் ஈரானில் விபத்து,170 பயனர்களும் பலி

இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து  புறப்பட்ட இந்த விமானத்தில் இருந்த  170 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
iran, iran plane crash, iran flight crash, iran iraq map

iran, iran plane crash, iran flight crash, iran iraq

Ukraine plane crash in Iran : புதன்கிழமை தெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து  புறப்பட்ட உக்ரைன் விமானம்   சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

Advertisment

இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து  புறப்பட்ட இந்த விமானத்தில் பயணம் செய்த 170 பயணிகள்  பலியானதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது.

ஈரானின் குடிமை விமானப் செய்தித் தொடர்பாளர் ரெசா ஜாபர்சாதேவை இது குறித்து கூறுகையில், விசாரணைக் குழு தெஹ்ரானின் தென்மேற்கு புறநகரில் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்துவருவதாக கூரினார்.

ஈரானின் அவசர தேவைகள் பிரிவின் தலைவர் பிர்ஹோசீன் இது குறித்து கூறுகையில்,'விமானம் தீப்பிடித்து வருகிறது, மீட்புக் குழுவினரை அனுப்பியுள்ளோம்" என்று கூறினார்.

விமான நிலையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளின் படி, புதன்கிழமை காலை உக்ரேனிய 737-800 விமானம் புறப்பட்டு சென்றிருக்கிறது. பின்னர், சில மணி நேரங்களில் தரவுகளை அனுப்பவதை நிறுத்தியதாக  ஃப்ளைட்ராடார் 24  என்ற வலைத்தளம் தெரிவிக்கின்றது.

இது குறித்து கருத்துக் கோரியதற்கு விமான நிறுவனம் உடனடியாக எந்த பதிலையும் அளிக்கவில்லை.

விமானம் கியேவுக்குப் புறப்பட்டதாகவும் … அதில் 180 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ கூறியுள்ளது.

ukraine plane crash in Iran தெஹ்ரானின் தென்மேற்கு புறநகரில் விபத்து நடந்த இடத்தில் விசாரணைக் குழு

 

ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இரண்டு அமெரிக்கா  தளங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்திய சில மணிநேரங்களுக்கு பின்னர் இந்த விபத்து ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஈரான் விமான விபத்துக்குள்ளான இடத்திலிருந்து வரும் காட்சிகள் : 

 

 

 

Ukraine Iran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment