Advertisment

தாய் நாட்டுக்காக போரிட வெளிநாடுகளில் இருந்து திரும்பிய உக்ரைன் ஆண்கள்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து போராட, வெளிநாடுகளில் வசிக்கும் உக்ரேனியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்

author-image
WebDesk
New Update
தாய் நாட்டுக்காக போரிட வெளிநாடுகளில் இருந்து திரும்பிய உக்ரைன் ஆண்கள்

Ukrainian men return from abroad to fight Russian invasion: உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் அகதிகளாக உக்ரைனை விட்டு வெளியேறும்போது, ​​சில உக்ரேனிய ஆண்களும் பெண்களும் தங்கள் தாயகத்தைப் பாதுகாக்க ஐரோப்பா முழுவதிலும் இருந்து உக்ரைனுக்கு திரும்பி வருகின்றனர்.

Advertisment

தென்கிழக்கு போலந்தில் உள்ள மெடிகாவில் உள்ள சோதனைச் சாவடியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரைனுக்குச் செல்வதற்காக பலர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

"நாம் எங்கள் தாயகத்தை பாதுகாக்க வேண்டும். நாங்கள் இல்லையென்றால் வேறு யார்,” என்று உக்ரைனுக்குள் நுழைவதற்காக சோதனைச் சாவடிக்கு நடந்து செல்லும் சுமார் 20 உக்ரேனிய டிரக் டிரைவர்கள் குழுவிற்கு முன்னால் ஒருவர் கூறினார். அவர்கள் ஐரோப்பா முழுவதும் இருந்து உக்ரைனுக்குத் திரும்ப வந்தனர். அவர்கள் உக்ரேனிய மொழியிலும் ரஷ்ய மொழியிலும் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் (AP) பேசினர்.

குழுவில் இருந்த மற்றொரு நபர் கூறினார்: “ரஷ்யர்கள் பயப்பட வேண்டும். நாங்கள் பயப்படவில்லை” என்றார். தங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பெயர்களைக் கொடுக்க மறுத்துவிட்டனர், அல்லது அவர்களின் முதல் பெயர்களை மட்டுமே கொடுத்தனர்.

இதையும் படியுங்கள்: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரஸில் இல்லை – உக்ரைன் அதிபர்

30 வயதுடைய பெண் ஒருவர், தனது முதல் பெயரை லெசா என்பதாக கூறினார், அவர் சோதனைச் சாவடி கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு AP உடன் பேசினார். "நான் பயப்படுகிறேன், ஆனால் நான் ஒரு தாய், என் குழந்தைகளுடன் இருக்க விரும்புகிறேன். நீங்கள் என்ன செய்ய முடியும்? இது பயமாக இருக்கிறது ஆனால் நான் செய்ய வேண்டும்." என்று கூறினார். மற்றொரு இளம் பெண், உக்ரேனிய ஆண்கள் நாட்டைப் பாதுகாக்கும் வகையில், தானும் தனது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகத் திரும்பி வருவதாகக் கூறினார்.

publive-image

"உக்ரேனியர்களான நாங்கள் எங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும்... அப்போது தான் எங்கள் ஆண்கள் சண்டையிட முடியும்," என்று அவர் கூறினார்.

ரஷ்ய படையெடுப்பை அடுத்து உக்ரைனில் இருந்து குறைந்தது 150,000 பேர் போலந்து மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று ஐ.நா அகதிகள் அமைப்பான UNHCR சனிக்கிழமை தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு செல்பவர்களின் புள்ளிவிவரங்களை அந்த அமைப்பு கொடுக்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment