‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ – ஐ.நா.வில் மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி

PM Modi in UN meet : தமிழ் கவிஞர், கணியன் பூங்குன்றனார், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என, பாடியுள்ளார். உலகத்தை ஒரு குடும்பமாக பார்ப்பது தான், பாரதத்தின் பண்பாடு

By: Updated: September 28, 2019, 11:29:27 AM

PM Modi in UN meet : இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை. தமிழ் கவிஞர், கணியன் பூங்குன்றனார், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என, பாடியுள்ளார். உலகத்தை ஒரு குடும்பமாக பார்ப்பது தான், பாரதத்தின் பண்பாடு. என, ஐ.நா., பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசினார்.

ஐ.நா.,வின், 74ம் ஆண்டு பொதுக் கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த, 24ம் தேதி துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக, 21ல், பிரதமர், மோடி அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து, இருதரப்பு உறவுகள் பற்றி பேசினார்.

பின் நேற்று ( 27ம் தேதி) ஐ.நா.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, மனித குலத்தின் விரோதியான தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க, நாம் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். பயங்கரவாதத்தை ஒழிப்பதில், அலட்சியம் காட்டக் கூடாது. நாட்டிற்கு, யுத்தம் வேண்டாம்; புத்தரின் கோட்பாடுகளே தேவை. மனித நேயத்துக்காக, உலகம் ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக, 1996ல், இந்தியா கொண்டு வந்த தீர்மானம், இன்னும் எழுத்து வடிவிலேயே உள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், நாம் பாரபட்சம் காட்டுவது, ஐ.நா., உருவாக்கப் பட்டதற்கான அடிப்படை கொள்கையையே சிதைத்து விடும். அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893ல் நடந்த சர்வமத மாநாட்டில் பங்கேற்ற, சுவாமி விவேகானந்தர், வரலாற்று சிறப்பு மிக்க உரையாற்றினார். உலக அமைதி, ஒற்றுமை குறித்து அவர் தெரிவித்த கருத்துகளை, இந்தியா பின்பற்றி வருகிறது.

இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை. தமிழ் கவிஞர், கணியன் பூங்குன்றனார், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என, பாடியுள்ளார். உலகத்தை ஒரு குடும்பமாக பார்ப்பது தான், பாரதத்தின் பண்பாடு. மகாத்மா காந்தியின், 150வது பிறந்த ஆண்டை, உலகம் கொண்டாடிவருகிறது. அவரது அஹிம்சை கொள்கை, இன்றும் நமக்கு பொருத்தமாக உள்ளது.அமைதி, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு, காந்தியின் அஹிம்சை கொள்கை தான் வழிகாட்டுகின்றன என்று பிரதமர் மோடி பேசினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Un meet pm modi kaniyan pungundranar terrorism

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X