UN salutes India for lift the ban on hydroxychloroquine : கொரோனா நோயாளிகளுக்கு மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகளை வழங்கலாம் என்ற பரிந்துரையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மார்ச் மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகு இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது.
Advertisment
இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் மிரட்டும் தொனியில் கோரிக்கை வைக்க, முதலில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது இந்திய அரசு. பின்பு பிரேசில், இத்தாலி, இலங்கை, நேபாளம், ஜாமியா, டோமினிக், மாலி, ஜைமைக்கா, ஜோர்டான், உக்ரைன் போன்ற நாடுகளுக்கு வழங்கியது. ஆசியாவில் ஆப்கானிஸ்தான், பூட்டான், மால்தீவ்ஸ், மியான்மர் போன்ற நாடுகளுக்கும் மாத்திரைகளை அனுப்பும் பணியில் ஈடுபட்டது இந்தியா.
இந்தியாவின் இத்தகைய செயல்களை ஆண்டனியோ குட்டோரேஸ், ஐ.நா. பொதுசெயலாளர் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக ஜெனிவாவில் நேற்று பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டெபானி துஜரிர்க் பேசுகையில் ”ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா வழங்கிவருகிறது பாராட்டுதலுக்குரியது. இந்த செயலுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என்று கூறியுள்ளார். இந்தியா இந்த மருந்தினை 55 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”