விமானத்தில் மயக்கமான கைக்குழந்தை.. உயிரை காப்பாற்ற ஊழியர்களிடம் கெஞ்சும் தாய்!

மற்ற பயணிகள் அனைவரும்  ”அவமானம் அவமானம்” என்று   கோஷங்களை எழுப்பினர். 

பாகிஸ்தான் விமானம் :  விமானத்தில் கைக்குழந்தை திடீரென்று மயக்கமானதால் ,  குழந்தையின் உயிரைக் காப்பாற்ற  அந்த குழந்தையின்  தாய் ஊழியர்களிடன் கெஞ்சும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸிலிருந்து பாகிஸ்தான் நோக்கி வரும் பயணிகள் விமானத்தில்  பெண் ஒருவர் தனது 5 மாதக் குழந்தையுடன்  பயணித்தார்.  அப்போது விமானம் 2 மணி நேரம் தாமதாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டதால்  பயணிகள் அனைவரும்  விமானத்தினுள் அமர்ந்திருந்தனர்.

அப்போது,  விமானத்தில்  இருந்த   ஏசியில் இருந்து வெளியான  வாயு காரணமாக  குழந்தை திடீரென்று மயக்கமானது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய்,  அங்கிருந்த ஊழியர்களிடம் இதுப்பற்றி கூறி விமானத்தின் கதவை உடனடியாக திறக்கும் படி கெஞ்சினார்.

பாகிஸ்தான் விமான சேவை:

ஆனால், விமான ஊழியர்கள் கதவை திறக்க மறுப்பு தெரிவித்தனர்.  இதனால் கோபம் அடைந்த அந்த பெண், தனது  குழந்தை தூக்கிக் கொண்டு ஊழியர்களிடம் கெஞ்சினார், சண்டைப்போட்டார், அழுதும்  போராடி பார்த்தார்.

ஆனால்,   விமான ஊழியர்கள் முறையான அறிவிப்பு வரும் வரை கதவை திறக்க முடியாது என்று கூறிவிட்டனர்.அதன் பின்பு அங்கிருந்த மற்ற பயணிகள் அனைவரும்  ”அவமானம் அவமானம்” என்று   கோஷங்களை எழுப்பினர்.

அதன் பின்பு,  ஊழியர்கள்  விமானத்தின் கதவை திறந்து  அந்த பெண்ணை வெளியில் அனுப்பினர்.   வெளியில் காத்திருந்த மருத்துவர்கள் உடனடியாக  குழந்தைக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர். இந்த சம்பவம் அனைத்தும் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.

குழந்தையின் உயிரை காப்பாற்ற பெண் ஊழியர்களிடம் கெஞ்சுவதும், ஊழியர்கள் இரக்கம் இல்லாமல் மறுப்பதும் சமூகவலைத்தளங்களில் பெரும் விமர்சனத்தை எழுத்தியுள்ளது.  மேலும் பாகிஸ்தான் விமான சேவைக் குறித்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close