நிதி பற்றாக்குறையால் 2 நாட்கள் மூடப்படும் ஐ.நா சபை

கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவேன்றால், வெறும் 35  நாடுகள் மட்டும் உரிய நேரத்திற்குள் தங்கள் நாட்டிற்கான முழுத் தொகையைக் கொடுத்துள்ளன

By: Updated: October 20, 2019, 03:00:08 PM

ஐக்கிய நாடுகள் அவையில்  கடும் பட்ஜெட் பற்றாக்குறையால் நியூ யார்க்கில் அதன் தலைமைக் கட்டடத்தை வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களுக்கு  மூடுவதாய் அறிவித்துள்ளது.

 

இது குறித்து ட்விட்டரில் , உங்கள் நாடு இந்த நிதி ஆண்டிற்கான நிதி பங்களிப்பை கொடுத்துவிட்டதா ? அதை நீங்கள் பரிசோதித்துவிட்டீர்களா? என்று பதிவு செய்துள்ளது.

198 நாடுகளை உறுப்பினர்களாய் கொண்ட ஐக்கிய நாடுகள் அவையில், 131 உறுப்பு நாடுகள் தங்களது வழக்கமான பட்ஜெட் நிதியை  முழுமையாக செலுத்தியுள்ளன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவேன்றால், வெறும் 35  நாடுகள் மட்டும் உரிய நேரத்திற்குள் தங்கள் நாட்டிற்கான முழுத் தொகையைக் கொடுத்துள்ளன.

இந்தியாவின்  ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியுமான சையத் அக்பருதீன், இது குறித்து தெரிவிக்கையில்,  நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்திய கனடா, சிங்கப்பூர், பூட்டான், பின்லாந்து, நியூசிலாந்து, நார்வே  போன்ற வரிசையில் இந்தியாவும் ஒன்று என்று கூறினார்.

உறுப்பு நாடுகள் கொடுக்கும் நிதியில் தான் ஐ.நா அவை இயங்கும். கடந்த சில வருடங்களாகவே ஐ.நா சபை பணப் பற்றாக்குறையோடு இயங்கி வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Unhq building in nyc will be closed due to ongoing cash crisis

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X