ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய விருதினைப் பெற்ற நரேந்திர மோடி

கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கும் கிடைத்த சிறப்பு அங்கீகாரம்...

கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கும் கிடைத்த சிறப்பு அங்கீகாரம்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நரேந்திர மோடி மற்றும் இமானுவேல் மேக்ரோன் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது

நரேந்திர மோடி மற்றும் இமானுவேல் மேக்ரோன் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது

PM Modi Wins 'Champion of the Earth Award':  நரேந்திர மோடி மற்றும் இமானுவேல் மேக்ரோன் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது பெறுகிறார்கள்.  ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் சர்வதேச விருதான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருதினை இந்த வருடம் ஆறு நபர்கள் பெற்றிருக்கிறார்கள். அதில் நரேந்திர மோடியும் ஒருவர். 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ப்ளாஸ்டிக்கின் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அவர் வெளியிட்ட அறிக்கை இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisment

சாம்பியன்ஸ் ஆஃதி எர்த் விருதின்  “பாலிசி லீடர்ஷிப் கேட்டகரியின்”  கீழ் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெறுகின்றார்கள். சுற்றுச் சூழல் மாசுபாட்டினை தடுப்பதற்காக இவ்விரு தலைவர்களும் எடுத்துக் கொண்ட ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை முன் வைத்து இந்த விருதுகள் அளித்து கௌரவித்திருக்கிறது ஐநா.

To Read this in English

இது குறித்து பாஜக தலைவர் அமித் ஷா நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “இது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் தருணம். ஐநாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றை மோடிக்கு அளித்து கௌரவித்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.

Advertisment
Advertisements

கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

அதே போல் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கும் எண்டெர்பெர்னெரியல் விஷன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கொச்சின் சர்வதேச விமான நிலையம் உலகில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்திருக்கும் விமான நிலையம் ஆகும். சூரிய ஒளியின் மூலமாகவே மொத்த விமான நிலையமும் இயங்குகிறது என ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான UNEP (UN Environment Programme) அறிவித்திருக்கிறது.

Narendra Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: