ட்ரம்ப் பரஸ்பர வரிவிதிப்புக்கு தடை; வர்த்தக நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

டொனால்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் தொடர்பான நீதிமன்றப் போர் தொடங்கியுள்ள நிலையில், வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் தொடர்பான நீதிமன்றப் போர் தொடங்கியுள்ள நிலையில், வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Trump tariffs

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சில நாடுகள் மீது இறக்குமதி வரிகளை விதித்தார். இந்த வரிகள் சட்டவிரோதமானவை என்று நேற்று முன்தினம் (புதன்கிழமை) தீர்ப்பளித்த அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் ட்ரம்பின் நிர்வாகம் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து வெள்ளை மாளிகை மேல்முறையீடு செய்தது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment

இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்யும் வரை வரிகள் அமலில் இருக்கும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இது குறித்து, வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்பின் தலைமை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, வர்த்தக நீதிமன்றத்தின் முடிவுக்கு நிர்வாகம் "வலுவாக பதிலளிக்கும்" என்றும், "இந்த வழக்கு முடியும் வரை போராட தயாராக உள்ளது" என்றும் கூறினார்.

மேலும், "நாங்கள் தோற்றாலும், வேறு வழியில் இதை செய்வோம்" என்றும் தெரிவித்த அவர், நீதிமன்றத்தின் தடையால் வரிகள் தற்போது அமலில் இருக்கும் என்றும், பிற நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிர்வாகம் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் நவரோ உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன?

அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் நேற்று முன்தினம் (மே 28), ட்ரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார். 1977 ஆம் ஆண்டு சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை ட்ரம்ப் பயன்படுத்தியது தவறு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அனைத்து நாடுகளுக்கும் அடிப்படை 10 சதவீத வரியை விதிக்கவும், சில நாடுகளுக்கு அதிக வரிகளை விதிக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார். இந்த திட்டங்களுக்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.

Advertisment
Advertisements

தொழில் துறை சார்ந்த வரிகள் குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவிக்கவில்லை. அவை வேறு சட்டத்தின் கீழ் வருகின்றன. நியூயார்க், நியூ மெக்சிகோ, கனெக்டிகட் மற்றும் அரிசோனா உட்பட பன்னிரண்டு அமெரிக்க மாநிலங்களும், ஐந்து சிறிய வணிகங்களும் இந்த வரிகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்தன. இரண்டு வழக்குகளையும் நீதிமன்றம் ஒன்றாக இணைத்தது. இறக்குமதி வரிகளுக்கான சுமையை மாநிலங்களே ஏற்க வேண்டும் என்றும், மெக்சிகோ, கனடா மற்றும் சீனா மீது விதிக்கப்பட்ட ஆரம்ப வரிகளுக்கு போதைப்பொருள் கடத்தலை குறிவைக்கவில்லை என்றும் மாநிலங்கள் வாதிட்டன.

நீதிமன்றத்தின் அதிகார மீறல்

இது குறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் முடிவை நீதிபதிகளின் "நீதிமன்ற அதிகார மீறல்" என்று கூறினார். மேலும், பிற நாடுகளுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையை சமாளிக்க ட்ரம்ப் வரிகளை அறிமுகப்படுத்தினார்.  இது தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அசாதாரண அச்சுறுத்தல். ட்ரம்பின் வரிகள் "சட்டப்பூர்வமானவை". வர்த்தக பற்றாக்குறைக்கு எதிரான "நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் தைரியமான நிலைப்பாடு" என்றும் லீவிட் கூறினார்.

Donald Trump

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: