செனட் சபைக்கான தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரெம்பின் கட்சி

இது மாபெரும் வெற்றி... அனைவருக்கும் நன்றி என டொனால்ட் ட்ரெம்ப் ட்வீட்

அமெரிக்க செனட் சபை : அமெரிக்காவில் இன்று காலை இடைக்காலத் தேர்தல்கள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகி வருகின்றன.இந்திய நாடாளுமன்றம் போலவே அமெரிக்காவிலும் இரண்டு அவைகள் இருக்கின்றன. அவை முறையே செனட் (மேலவை) என்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்றும் வகைமைப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க செனட் சபை தேர்தல் :

செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆகும். பிரதிநிதிகள் சபையில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 435 ஆகும்.  அதிபர் தேர்தல்களுக்கு மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெற்றதால் இவை இடைக்காலத் தேர்தல்கள் என்று அழைக்கப்பட்டன.

இன்று மேலவையான செனட் சபையில் 100 இடங்களுக்குமான தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. பிரதிநிதிகள் சபைகளில் சில தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. மேலும் 36 மாகாணாங்களுக்கான ஆளுநர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

குடியரசுக் கட்சி பெரும்பான்மை

வாக்குப்பதிவு முடிவடைந்த உடனே வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் பங்கேற்ற டோனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி அதிக வாக்குகள் பெற்று செனட் சபையில் மீண்டும் தங்களின் பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது மிகப் பெரும் வெற்றி. அனைவருக்கும் நன்றி என டொனால்ட் ட்ரெம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.

அதிபர் தேர்தல் நடந்து முடிவடைந்த பின்னால் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு வாக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க : டொனால்ட் ட்ரெம்ப் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது ஈரான் மீதான பொருளாதாரத் தடை

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close