கொரோனாவுல செத்து செத்து வெளையாட புதுசா கேம் கண்டுபிடிச்சுருக்காங்க மக்கா…

கோவிட்19 பாஸிட்டிவ் நபர்களை அழைத்து விருந்து வைக்கப்படுகிறது. அந்த விருந்தில் கலந்து கொள்ளும் நபர்களில் யாருக்கு முதலில் கொரோனா வருகிறதோ அவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

By: July 3, 2020, 12:40:22 PM

US college students organise Covid-19 parties in Alabama : கொரோனா நோயை ஒழிக்க தற்போது வரை மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தனி மனித இடைவெளி மற்றும் அவசியமற்ற காரணங்களுக்கு வெளியே செல்லாமல் இருப்பது தான் தற்காலிக தீர்வு என்று கூறப்படுகிறது.

அதையும் மீறி அந்த நோய் தொற்று ஏற்படும் நபர்களை கவனித்துக் கொள்ள போதிய மருத்துவமனைகள், மருத்துவர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு தனி மனிதனும் பொறுப்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க : மீண்டும் ஒரு துயரம்…பெண் யானை சுட்டுக் கொலை! கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்

அமெரிக்காவின் அலபாமாவில் கோவிட்19 விருந்துகள் நடத்தப்படுகிறது. இந்த விருந்துகளுக்கு கோவிட்19 பாதிக்கப்பட்ட நபர் அழைக்கப்படுகிறார். அவர் மூலம் யாருக்கு மிக விரைவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்பதை வைத்து பந்தயங்களும் போட்டிகளும் நடத்தி வருகிறார்கள் அங்கு படிக்கும் கல்லூரி மாணவர்கள்.

அந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் அங்கு வைத்திருக்கும் பாத்திரம் ஒன்றில் அவர்கள் வைக்கும் பந்தய தொகையை போட வேண்டும். யார் முதலில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகின்றாரோ அவருக்கு அந்த பணம் முழுவதும் கொடுக்கப்படும்.

அலபாமா பல்கலைக்கழகம் மட்டுமல்லாது பல முக்கியமான கல்லூரிகளை கொண்டுள்ளது டுஸ்கலூசா நகரம். இங்கு நடைபெற்று வந்த கொரோனா விருந்து குறித்து பேசிய தீயணைப்புத்துறை தலைவர் ரேண்டி ஸ்மித் இதனை முதலில் நம்பவில்லை. ஆனால் பிறகு அந்த மாணவர்கள் வேண்டுமென்றே இது போன்ற விருந்துகளை நடத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த மாணவர்கள் குறித்தும் அவர்கள் எங்கே படிக்கின்றார்கள் என்பதை குறித்தும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Us college students organise covid 19 parties in alabama

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X