இஸ்லாமியர்களுக்கு தடை கூடாது: மதப் பாகுபாட்டை தடுக்க அமெரிக்கா சட்டம்

வருங்காலத்தில் எந்த ஒரு அதிபரும் இது போன்று தடையை அமல்படுத்த கூடாது என்பதை கருத்தில் கொண்டு புதிய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்

US Democrats reintroduce legislation to prevent future Muslim bans,

US Democrats reintroduce legislation to prevent future Muslim bans : 140 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான தடை விதிப்பதை தடுத்தல் மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடு காண்பதை தடுக்கவும் சட்டம் ஒன்றை மறு அறிமுகம் செய்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் இஸ்லாமியர்களுக்கு எதிரான பயணத்தடையை அமல்படுத்தினார். இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளான ஈரான், வடகொரியா, சிரியா, லிபியா, ஏமன், சோமாலியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து மக்கள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. தன்னுடைய ஆட்சியின் முதல் நாளில் ஜோ பைடன் இஸ்லாமியர்களுக்கு எதிரான பயண தடையை ரத்து செய்தார்.

பிரதிநிதிகள் சபையில், National Origin-Based Antidiscrimination for Nonimmigrants (NO BAN) சட்டத்தை வெள்ளிக்கிழமை அன்று மறுபடியும் அறிமுகம் செய்தது. இதனை சபையின் நீதிக்கமிட்டி தலைவர் ஜெர்ரால்ட் நாட்லெர் மற்றும் ஜுடி ச்சூ ஆகியோர் அறிமுகம் செய்தனர்.

இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தவர்களில் இந்திய – அமெரிக்க பின்னணியை கொண்ட அமி பெரா, ரோ கண்ணா, ப்ரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் அடங்குவார்கள். இந்த சட்டம் மதம் அடிப்படையிலான தீண்டாமைக்கு எதிராக செயல்படுகிறது.

ட்ரெம்ப் நிர்வாகம் இதனை அறிமுகம் செய்த போதே இது வெளிப்படையாக அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தீண்டாமை பண்பு கொண்டது என்பது உறுதியானது என்றார் நாட்லெர். முதல் நாளிலேயே இந்த தடையை நீக்கி குடும்பங்கள் ஒன்றிணைய உறுதி செய்தார். ஆனால் வருங்காலத்தில் எந்த ஒரு அதிபரும் இது போன்று தடையை அமல்படுத்த கூடாது என்பதை கருத்தில் கொண்டு புதிய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம் என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Us democrats reintroduce legislation to prevent future muslim bans

Next Story
பாங்காக்: சாலையோர உணவகங்களுக்கு தடையில்லை… சுகாதாரமான உணவு வழங்க அட்வைஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com