Advertisment

மறு வாக்கு எண்ணிக்கை... தபால் வாக்குகளில் சிக்கல்... தொடர் இழுபறியில் தேர்தல் முடிவுகள்!

தேர்தலில் வெற்றி பெறுபவர்களை உறுதி செய்யும் மாகாணத்தில் குறைவான எண்ணிக்கையிலான வாக்குகளும் மிக முக்கியமானது.

author-image
WebDesk
New Update
US election 2020 Trump sues in Pennsylvania, Michigan; asks for Wisconsin recount

US election 2020: Trump sues in Pennsylvania, Michigan; asks for Wisconsin recount தபால் வாக்குகள் இன்னும் எண்ண துவங்கப்படாத மாகாணங்களான பெனிசில்வேனியா மற்றும் மிச்சிகனில் ட்ரெம்பின் பிரச்சார குழு வழக்குகள் பதிவு செய்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகள் டொனால்ட் ட்ரெம்ப் ஆட்சியை தக்க வைப்பரா என்பதை உறுதி செய்யும் மாகாணங்களாக இவைகள் இருப்பதால் இந்த விவகாரம் கொஞ்சம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Advertisment

இந்த இரண்டு மாகாணங்களிலும் தபால் வாக்கு சீட்டுகளை எண்ணும் இடங்களில் சிறந்த அணுகலை கேம்பைன் அப்செர்வர்களுக்கு வழங்க வேண்டும் என்று அந்த புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த மூன்ற நாட்கள் வரை தபால் வாக்குகளை பென்சில்வேனியாவில் எண்ண முடியுமா என்று ஏற்கனவே நிலுவையில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் தலையீட்டினை மேற்கொள்ள இயலுமா என்றும் இந்த பிரச்சார குழு பார்ப்பதாக துணை பிரச்சார மேலாளர் ஜெஸ்டின் க்ளார்க் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எண்ணப்பட்ட தபால் வாக்குகளை மறுபரிசீலனை செய்யவும், நிறைய இடங்களில் தேவையான அணுகல்களை வழங்கும் வரையில் இரண்டு மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் பிரச்சார குழு கூறியுள்ளது. டெமாக்ரடிக் வேட்பாளர் ஜோ பைடனை காட்டிலும் டொனால்ட் ட்ரெம்ப் மிச்சிகனில் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார். ஆனால் பென்சில்வேனியாவில் அதிபர் முன்னணி வகித்தாலும் தொடர்ந்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

publive-image

பென்சில்வேனியாவிற்கு வெளியே வேறெந்த மோசடி மற்றும் தபால் வாக்குகள் தொடர்பான பிரச்சனைகள் ஏதும் இல்லை. 3.1 மில்லியன் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. எனவே இந்த வாக்குகளை எண்ண நேரம் தேவைப்படும். நவம்பர் 3ம் தேதியில் இருந்து வருகின்ற வெள்ளிக்கிழமை வரை அந்த வாக்குகள் எண்ணப்படும்.

ட்ரெம்பின் பிரச்சார குழு விஸ்கோன்சினிலும் மறு எண்ணிக்கையை கோரியுள்ளதாக கூறியுள்ளது. பிரச்சார மேலாளர் பில் ஸ்டெஃபியன் விஸ்கோன்சினின் சில கிராமப் பகுதிகளில் பதிவான வாக்குகளில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவர் மேற்கோள் காட்டினார்.

அதிபர் தேர்தல் முடிவுக்கு மிக முக்கியமான மாகாணங்களில் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணத் துவங்கியதன் விளைவாக இந்த நடவடிக்கைகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் துணை அதிபர் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் முடிவுகளை வரவேற்றுள்ளார். ஜோ பைடனின் பிரச்சார வழக்கறிஞர் சட்ட ரீதியான போராட்டத்திற்கு தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார். மிச்சிகனின் டெமாக்ரெட் கட்சியினர் இந்த வழக்கை லாங்ஷாட் என்று கூறியுள்ளனர்.

சுதந்திரமாக செயல்படும் வழக்கறிஞர் குழுவான ப்ரோகிரஸ் மிச்சிகன் அமைப்பின் இயக்கநர் லான்னி ஸ்காட், டொனால்ட் ட்ரெம்ப் தி அசோசியேட் ப்ரஸ் மற்றும் இதர மீடியாக்கள் இந்த வெற்றி பைடனுக்கானது என்று அழைப்பதை நிறுத்தவே வழக்கினை பதிவு செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இந்த புகாரின் நகலை உடனடியாக பொதுமக்களுக்கு வைக்கவில்லை பிரச்சார குழு. ஏன் என்றால் அவர்களுக்கு எந்த பகுதியில் அணுகலுக்கு என்ன மறுக்கப்படுகிறது என்பதில் தெளிவுகள் ஏதும் இல்லாமல் இருக்கிறார்கள்.

publive-image

கேள்விக்குரிய ஒரு முக்கிய வாக்குச் சாவடியான டெட்ராய்ட்டின் டி.சி.எஃப். மையத்தில் இரு தரப்பிலிருந்தும் வாக்கெடுப்பு பார்வையாளர்கள் புதன்கிழமை ஏராளமாக இருந்தனர் என்பதை அசோசியேட் பிரஸ் கவனித்தது. கன்வென்சன் செண்டரின் ஹாலின் நுழைவாயில் பகுதியில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் தபால் வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் அவர்கள் சுற்றி வந்தனர். சில நேரங்களில் பலர் கூட்டமாக வந்து அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட துவங்கினர். எந்தவிதமான பதட்டமான சூழலும் ஏற்பட கூடாது என்பதை உறுதி செய்தனர் டெட்ராய்ட் காவல்துறையினர்.

டெட்ராய்ட் வாக்கு எண்ணிக்கையை தானாக முன்வந்து கவனிப்பதாக கூறிய தன்னார்வ வழக்கறிஞர் மற்றும் முன்னாள் மாநில ஜனநாயகக் கட்சியின் தலைவர் மார்க் ப்ரூவர், தான் நாள் முழுவதும் டி.சி.எஃப் அரங்கில் இருந்ததாகவும், கடந்த 2 நாட்களாக அங்கு இருந்த மற்றவர்களுடன் பேசியதாகவும் கூறினார். குடியரசுக் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்பதையும் அவர் உறுதி செய்தார்.

டெட்ராய்ட்டில் நடைபெறும் மிகச்சிறந்த தபால் வாக்கு எண்ணிக்கை இதுவாக தான் இருக்கும். குடியரசு கட்சியினரின் தந்திரங்களை தாண்டியும் சிறப்பாக வாக்குகளை எண்ணுகின்றனர். குடியரசுக் கட்சியினர் ஏற்கனவே பென்சில்வேனியா மற்றும் நெவாடாவில் இல்லாத வாக்குகளை உள்ளடக்கிய பிற சட்ட சவால்களை அதிகரித்து வருகின்றனர், நெருக்கமான தேர்தலில் தேசிய முக்கியத்துவத்தை எடுக்கக்கூடிய உள்ளூர் முடிவுகளுக்கு போட்டியிடுகின்றனர்.

முன்னதாக புதன்கிழமை, அமெரிக்க தேர்தல் விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வதாக ட்ரெம்ப் கூறியிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை சில நாட்கள் நீடிக்கும் நாட்டில், எப்போது வாக்கு எண்ணிக்கை நிறைவுறும் என்பது தொடர்பாக மாகாணங்கள் விதிமுறைகளை கொண்டிருக்கும் நாட்டில் இவர் எதை குறிப்பிட்டு பேசுகிறார் என்பது புரியவில்லை.

We’ll be going to the US Supreme Court — we want all voting to stop (நாம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம். அனைத்து வாக்கு பதிவுகளும் நிறுத்தப்பட வேண்டும்) என்று ட்ரெம்ப் வெள்ளை மாளிகையில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கூறியிருந்தார். ஆனால் வாக்களிப்பு முடிந்துவிட்டது. தற்போது நாடு முழுவதும் வாக்கு எண்ணப்படும் வேலைகள் தான் நடைபெற்று வருகிறது. தேர்தல் நாளுக்குப் பிறகு போஸ்ட்மார்க் செய்யப்படாத வாக்குகளை எந்த மாநிலமும் கணக்கிடாது.

பைடனின் பிரச்சார குழு ட்ரெம்பின் அறிக்கையை மூர்க்கத்தனமானது, முன்னோடியல்லாதது, மற்றும் தவறானது என்று கூறியுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கைகளை தடுக்க நீதிமன்றத்திற்கு செல்வேன் என்று ட்ரெம்ப் அச்சுறுத்தினால், எங்களின் சட்டக்குழு இந்த முயற்சியை தடுத்து நிறுத்தும் என்றும் அதில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள் என்றும் பைடனின் பிரச்சார மேலாளர் ஜென் ஓ மல்லி தில்லோன் அறிக்கையில் கூறியுள்ளார்.

தேர்தல் சட்ட நிபுணர் ரிச்சர்ட் ஹாசென் ஞாயிற்றுக் கிழமை ஸ்லேட்டில் ”தேர்தல் இரவில் அதிகாரிகள் தங்கள் எண்ணிக்கையை முடிக்க முடியாவிட்டால், சரியான நேரத்தில் வரும் வாக்குச்சீட்டை கணக்கிட முடியாது என்று கூற எந்த அடிப்படையும் இல்லை” என்று எழுதினார்.

ஓஹியோ மாகாண பல்கலைக்கழக தேர்தல் சட்ட பேராசிரியர் எட்வர்ட் ஃபோலேய் தன்னுடிய ட்விட்டர் பக்கத்தில் ”சரியான வாக்குகள் எண்ணப்படும். வித்தியாசத்தை ஏற்படுத்தும் ஆனால் அதே நேரத்தில் கேள்விக்குரிய செல்லுபடியாகும் வாக்குகள் இருந்தால் மட்டுமே ஸ்கோட்டஸ் ஈடுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் வாக்களிப்பின் உத்தியோகபூர்வ வெற்றியாளரை சட்டத்தின் விதி தீர்மானிக்கும். சட்டத்தின் ஆட்சி செயல்படட்டும். ” என்று குறிப்பிட்டிருந்தார்.

எந்தவொரு நிகழ்விலும், மோசடி குற்றச்சாட்டுடன் நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல வழி இல்லை. ட்ரெம்பும் அவரது பிரச்சாரமும் தனிப்பட்ட மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்படும் விதத்தில் இருக்கும் சிக்கல்களைக் கூறலாம், ஆனால் அவர்கள் தங்கள் சட்டப் போராட்டத்தை ஒரு மாகாண நீதிமன்றம் அல்லது லோயர் ஃபெடரெல் நீதிமன்றத்தில் தொடங்க வேண்டும்.

புதன்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை வரும் தபால் வாக்குகளை எண்ணலாமா என்பது தொடர்பான குடியரசுகட்சியின் மனுவானது இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளும், அதிகாரிகள் கையில் எண்ணப்படாமல் இருக்கும் வாக்குகளும் அடங்காது. தேர்தலுக்கு முன்பு அந்த வாக்குகள் எண்ணிக்கையை நிராகரித்துவிட்டது உயர் நீதிமன்றம். ஆனால் கன்செர்வேட்டிவ் நீதிபதிகள் தேர்தலுக்கு பிறகு பிரச்சனையை மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறியது. வட கரோலினாவில் மாநில சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு அப்பால், வாக்களிக்காத வாக்குச்சீட்டுகளைப் பெறுவதற்கும் எண்ணுவதற்கும் நீட்டிப்பைத் தடுக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தேர்தலில் வெற்றி பெறுபவர்களை உறுதி செய்யும் மாகாணத்தில் குறைவான எண்ணிக்கையிலான வாக்குகளும் மிக முக்கியமானது. ட்ரெம்பிற்கும் பைடனுக்கு இடையேயான வித்தியாசம் ஆயிரமோ அல்லது நூறாகவோ இருந்தாலும் அது மாற்றத்தை நிச்சயம் உருவாக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Usa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment