Advertisment

டிரம்ப் டுவீட் 'ஜனநாயகவாதிகள் தேர்தலைத் திருட முயற்சி'; டுவிட்டர் எச்சரிக்கை

டுவிட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்கள் புதன்கிழமை அதிகாலை அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள் தவறாக வழிநடத்துவதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
US elections 2020, Donald Trump, Donald Trump twitter, அமெரிக்க அதிபர் தேர்தல் 2020, டொனால்ட் டிரம்ப், டுவிட்டர், ஃபேஸ்புக், US election results, Twitter flags trump tweet, facebook, usa president elections

டுவிட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்கள் புதன்கிழமை அதிகாலை அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள் தவறாக வழிநடத்துவதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisment

டுவிட்டர் நிறுவனம், தேர்தலை திருடும் முயற்சி என்ற டிரம்பின் டுவீட் தவறாக வழிநடத்தும் என்று தெரிவித்துள்ளது.

டிரம்ப் பதிவு “நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்” என்று கூறியதை பேஸ்புக் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், “இறுதி முடிவுகள் ஆரம்ப வாக்கு எண்ணிக்கையிலிருந்து வேறுபட்டிருக்கலாம். ஏனென்றால், வாக்கு எண்ணிக்கை நாட்கள் கணக்கில் அல்லது வாரங்கள் தொடரும்.” என்று கூறியுள்ளது.

“தேர்தலைப் பற்றி தவறாக வழிநடத்தும் கருத்து தெரிவித்ததற்காக டொனால்ட் டிரம்பின் டுவீட்டில் நாங்கள் ஒரு எச்சரிக்கையை வைத்தோம்” என்று டுவிட்டர் புதன்கிழமை காலை கூறியது. “அவர்கள் தேர்தலைத் திருட முயற்சிக்கிறார்கள். அப்படி செய்ய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று டிரம்ப் ஆதாரம் இல்லாமல் கூறியுள்ளார்.

ஒரு தனி பதிவில், டிரம்ப் ஒரு அறிக்கையை வெளியிடுவதாகக் கூறி குறிப்பிடுகையில், “ஒரு பெரிய வெற்றி!” என்று பதிவிட்டிருந்தார். இது குறித்து பேஸ்புக் கூறுகையில், “வாக்குகள் இன்னும் எண்ணப்படுகின்றன. 2020 அமெரிக்க அதிஅர் தேர்தலில் வெற்றி பெறுபவரை அறிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Twitter Usa Donald Trump Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment