அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு நடத்தப்பட்டதாகவும் அந்நாட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: US hires chartered flight to deport Indians who stayed in country illegally
குறிப்பாக, சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்கள், கடந்த 22-ஆம் தேதி வாடகை விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி முறையான அனுமதியின்றி அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்களை திருப்பி அனுப்பியதாகவும், கடத்தல்காரர்களின் வலைகளில் அவர்கள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டியின் இணைச் செயலர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டத்தை மீறு குடியேறி, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
எல்லை பாதுகாப்பு பிரகடனத்தின் படி, கடந்த ஜூன் மாதம் முதல், தென்மேற்கு துறைமுகங்கள் வழியாக நுழைபவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
2024 நிதியாண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாக அமெரிக்கா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் தங்கியுள்ளவர்களை திருப்பி அனுப்புவதற்கு பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பான குடியேற்றங்களை தடுக்கவும், பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் அந்நாடு கையாளும் ஒரு உக்தியாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்தவர்கள் பலர், பெரு, சீனா, இந்தியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“