Advertisment

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர் 2 மாதங்களுக்கு பின் மரணம்

அவரது மரணத்திற்கு சரியான காரணத்தை மருத்துவர்கள் சொல்லவில்லை. இருப்பினும், சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர் 2 மாதங்களுக்கு பின் மரணம்

முதன்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி இரண்டு மாதம் ஆன நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்ததாக மேரிலாந்து மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Advertisment

57 வயதான டேவிட் பென்னட், மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவர் மரணத்திற்கு சரியான காரணத்தை மருத்துவர்கள் சொல்லவில்லை. ஆனால், சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்தனர்.

பென்னட் மகன், மருத்துவமனையின் இறுதிக்கட்ட முயற்சியை பாராட்டுனார். இது, உறுப்பு பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிக்கு நிச்சயம் உதவும் என தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக உயிரைக் காக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்கு விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர். அமெரிக்காவின் டேவிட் பென்னட் என்ற 57 வயது இதய நோயாளி மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக மாற்று இதயம் பொருத்த வேண்டிய நிலை இருந்தது. மாற்று உறுப்பை ஏற்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை. கடைசி வரைக்கும் படுக்கையில் உயிர் காக்கும் கருவி உதவியிலே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், பன்றியின் இதயத்தை பொருத்தும் முயற்சிக்கு ஒப்புக்கொண்டனர்.

ஜனவரி 7 ஆம் தேதி, முதன்முறையாக பன்றியின் இதயம் மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்தனர். இதற்கு முன்பு, நோயாளியின் உடல் விலங்குகளின் பாகங்களை விரைவாக மறுத்ததால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, மேரிலாண்ட் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மரபணு திருத்தப்பட்ட பன்றியின் இதயத்தைப் பயன்படுத்தினர். அதாவது, உறுப்பை வேகமாக நிராகரிக்கும் செல்லை அப்புறப்படுத்திவிட்டு, உறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனித மரபணுக்களை சேர்த்து வடிவமைத்தனர்.

அவருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயம் சீராக செயல்ப்படுவதாக மருத்துவமனையில் தரப்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது. கடந்த மாதம், அவர் மருத்துவமனை படுக்கையில் இருந்தப்படி, டிவி பார்க்கும் வீடியோவும் வெளியிட்டது.

1984இல் கலிபோர்னியாவில் இறக்கும் தருவாயில் இருந்த குழந்தைக்கு பபூனின் இதயத்தை பொருத்தியதில் 21 நாள்கள் உயிர் வாழ்ந்த நிலையில், தற்போது செல் மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் இதயத்துடன் நீண்ட நாள் வாழ்ந்தவர் என்கிற பெயர் பென்னட்க்கு கிடைத்துள்ளது.

அறுவை சிகிச்சைக்கு உறுப்புகளின் அவசியம் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு மட்டும், அமெரிக்காவில் 41 ஆயிரம் உறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதில், 3800 இதய மாற்று அறுவை சிகிச்சையாகும். சுமார் 1 லட்சம் பேர், உறுப்புக்காக காத்திருக்கின்றனர். அதில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஆயிரம் பேர் இறந்தாலும், லிஸ்டின் நீளம் குறைந்தப்பாடில்லை.

உணவு மற்றும் மருந்து நிர்வாகம், அவசரகால சூழ்நிலையில் அங்கீகாரம் இல்லாத மருந்தை உபயோகிக்கும் வீதியின் கீழ், பென்னட்க்கு பன்றியின் இதயத்தை பொருத்த அனுமதித்தது

தற்போதயை கேள்வி என்னவென்றால், விஞ்ஞானிகள் பென்னட்டின் அனுபவத்திலிருந்தும், மரபணு மாற்றப்பட்ட பன்றி உறுப்புகள் திறன்கள் குறித்தும் அறிந்துகொண்டர்களா என்பது தான். அதே சமயம், பென்னட்டின் இரண்டு மாத கால வெற்றி, FDAஐ இந்த முயற்சியை தொடர வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை இதயத்திற்கு பதிலாக சீறுநீரகம் போன்ற உறுப்புகளை பொருத்தினால் நீண்ட நாள் வாழலாம் என கருதுகின்றனர்.

முன்னதாக இரண்டு முறை பன்றி சீறுநீரகம் பொருத்தப்பட்டு சோதனை நடைபெற்றுள்ளது. ஒன்று, நியூ யார்க் பல்கலைக்கழக அறுவை சிகிச்சை நிபுணர்கள், இறக்கும் நிலையில் இருந்த மனிதருக்கு, மரபணு திருத்தப்பட்ட பன்றி சிறுநீரகத்தை உடலுக்கு வெளியே உள்ள இரத்த நாளங்களில் இணைத்து, அவை எப்படி வேலை செய்கிறது என்பதை கண்காணித்தனர். அடுத்தது, அலபாமா பல்கலைக்கழகத்தில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு ஜோடி மரபணு திருத்தப்பட்ட பன்றி சிறுநீரகங்களை மூளை இறந்த ஒருவருக்கு மாற்றி சோதனையிட்டனர்.

மனித மருத்துவத்தில் பன்றிகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பன்றி தோல் ஒட்டுதல், பன்றி இதய வால்வுகளை பொருத்துதல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் அதிக பதப்படுத்தப்பட்ட திசுக்களைப் பயன்படுத்துவதை விட முழு உறுப்புகளையும் மாற்றுவது மிகவும் சிக்கலானது.

இந்த சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட மரபணு திருத்தப்பட்ட பன்றிகள், யுனைடெட் தெரபியூட்டிக்ஸின் துணை நிறுவனமான ரெவிவிகோரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment