us military on india china bordert dispute, us on galwan faceoff, us military india, white house, world news, indian express tamil, ietamil, இந்தியா, சீனா, எல்லை விவகாரம்
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தகராறு தொடர்பாக அமெரிக்க இராணுவம் இந்தியாவுடன் வலுவாக துணை நிற்கும் என்று வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Advertisment
தென் சீன கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்த கடற்பரப்பில் அமைந்துள்ள அண்டை நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான்,தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கி வருகிறது.
இதற்கிடையில், தென்சீன கடற்பரப்பில் அமைந்துள்ள பரசல் தீவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பகுதிகள் சர்வதேச கடல்பகுதியாகும்.
Advertisment
Advertisements
இதனால் அப்பகுதியில் உள்ள அண்டை நாடுகள் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் சீனாவின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது.
1,500 கிலோ மீட்டர்கள் பரப்பளவை கொண்ட தென்சீன கடற்பரப்பின் 90 சதவிகிதத்தை சீனா தனக்கு சொந்தமானது என உரிமைகோரி வருகிறது. சர்வதேச கடல் எல்லையை தன்னுடைய பகுதி என உரிமைகோரும் சீனாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், சீனா போர் பயிற்சி மேற்கொண்டு வரும் தென்சீன கடற்பரப்பிற்கு 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தகராறு தொடர்பாக அமெரிக்க இராணுவம் இந்தியாவுடன் வலுவாக துணை நிற்கும் என்று வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து கூறியதாவது:
“ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறுவிடுகிறோம். ஆசியாவில் இருந்தாலும் சரி அல்லது ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்தாலும் சரி. எந்த நாடும் தங்களை சக்தி வாய்ந்தவராக வெளிப்படுத்த மற்ற நாடுகளை அடக்கி, தங்களின் ஆதிக்கத்தை செலுத்தினால் அது சீனாவாக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும்சரி அதற்கு நாங்கள் துணை நிற்கமாட்டோம்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் மோதலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும் சரி, எங்கள் ராணுவம் நட்புறவுக்கு வலுவாக நிற்கும், தொடர்ந்து வலுவாக நிற்கும்.
கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலில் சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக சீனாவின் செல்போன் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. இதில் தவறு ஏதும் இல்லை.
எங்களின் இரு விமானம் தாங்கி கப்பல்களான ரொனால்ட் ரீகன், நிமிட்ஸ் ஆகியவற்றை தென் சீனக் கடலுக்கு அனுப்பியுள்ளோம். தென் சீனக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிவோம். மிகப்பெரிய ராணுவப்படை, வலிமையான சக்தி எங்களிடம் இருக்கிறது என்பதை உலகம் அறியவே அந்த படைகளை நாங்கள் அனுப்பியுள்ளோம்.
அமெரி்க்கா ராணுவத்தின் வளர்ச்சிக்காக அதிபர் ட்ரம்ப் ஏராளமான பணிகளைச் செய்துள்ளார். ஆயுதங்கள் உருவாக்கியது மட்டுமல்லாமல், படைக்கு ஆண்கள், பெண்களை தியாக உணர்வோடு சேர்த்ததில் அவரின் பங்கு முக்கியம். அதைத் தொடர்ந்து செய்வார்" என்று மீடோஸ் தெரிவித்தார்.
தென் சீனக் கடல் பகுதிக்கு இரு விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸிடம் இருந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil