அமெரிக்க வேலை விரும்பும் இந்திய ஐடி வல்லுனர்களுக்கு ஷாக்: டிரம்ப் புதிய உத்தரவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை கூட்டாட்சி முகவர் நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை முக்கியமாக எச்1பி விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்தப்படுவதை தடுக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

By: Updated: August 5, 2020, 07:30:38 AM

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை கூட்டாட்சி முகவர் நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை முக்கியமாக எச்1பி விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்தப்படுவதை தடுக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

அமெரிக்க வேலை மீது கண் வைத்திருக்கும் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரும் அடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை கூட்டாட்சி முகவர் நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை – முக்கியமாக எச்1பி விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்த ஒப்பந்தம் செய்வதிலிருந்தோ அல்லது துணை ஒப்பந்தம் செய்வதிலிருந்தோ தடுக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

முக்கியமான தேர்தல் ஆண்டில் அமெரிக்கத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக 2020ம் ஆண்டு இறுதி வரை எச்1பி விசாக்களையும் பிற வகை வெளிநாட்டு வேலை விசாக்களையும் டிரம்ப் நிர்வாகம் ஜூன் 23 இல் நிறுத்தியது. இதையடுத்து ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் ஜூன் 24 முதல் நடைமுறைக்கு வந்தன.

இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே மிகவும் விரும்பப்படும் எச்1பி விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாவாகும். இது அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை கருத்தியல் ரீதியாக அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்பு வேலைகளில் பணியமர்த்த அனுமதிக்கிறது.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசாவை நம்பியுள்ளன.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஃபெடரல் அரசு மிகவும் எளிமையான விதிகளின் மூலம் மூலம் உயர் அமெரிக்கர் வாழ்வதை உறுதி செய்வதற்கான நிர்வாக உத்தரவில் இன்று நான் கையெழுத்திடுகிறேன்” என்று கூட்டாட்சி ஒப்பந்தங்களுக்கு எச்1பி விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்துவதற்கு எதிரான உத்தரவில் கையெழுத்திடுவதற்கு முன் கூறினார்.

மலிவான வெளிநாட்டு உழைப்பைப் பெறுவதற்காக கடின உழைப்பாளிகளான அமெரிக்கர்கள் வேலை இழப்பதை தனது நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

“நாங்கள் பேசும்போது, ​​எச்1பி விசா ஒழுங்குமுறையை நாங்கள் இறுதி செய்கிறோம். இதனால் எந்த அமெரிக்க தொழிலாளர்களும் மீண்டும் மாற்றப்பட மாட்டார்கள். எச்1பி விசா மலிவான தொழிலாளர் திட்டங்களுக்காக அல்லாமல், அமெரிக்க வேலையை பறிப்பதற்காக அல்லாமல், அமெரிக்க வேலைகளை உருவாக்க அதிக சம்பளம் வாங்கும் திறமையாளர்களுக்கு எச்1பி பயன்படுத்தப்பட வேண்டும்.” என்று அமைச்சரவை புடைசூழ அதிபர் டொனால்ட் டிரம்ப் தனிநபர்கள் அவுட்சோர்சிங்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள்.

அவர்களில் முக்கியமானவர்கள் புளோரிடாவைச் சேர்ந்த அமெரிக்க தொழிலாளர்கள் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் சாரா பிளாக்வெல்; டென்னசி பள்ளத்தாக்கு ஆணையத்தின் மென்பொருள் பொறியாளரான ஜோனாதன் ஹிக்ஸ்; பென்சில்வேனியாவைச் சேர்ந்த அமெரிக்க தொழில்நுட்பத் தொழிலாளர்களின் நிறுவனர் கெவின் லின் ஆகியோர் ஆவர்.

நிர்வாக உத்தரவின்படி, அனைத்து கூட்டாட்சி முகமைகளும் ஒரு உள் தணிக்கையை முடிக்க வேண்டும். போட்டி பணிகளுக்கு அமெரிக்க குடிமக்கள் மற்றும் அமெரிக்க பிரஜைகள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு அவர்கள் இணங்குகிறார்களா என்பதை மதிப்பிடுவார்கள்.

இதன் விளைவாக, அமெரிக்க தொழிலாளர்களை இடமாற்றம் செய்ய எச்1பி தொழிலாளர்களை மற்ற முதலாளிகளின் வேலை இடங்களுக்கு நகர்த்துவதில் இருந்து தொழிலாளர் துறை எச்1பி முதலாளிகளைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் இறுதி செய்யும்.

டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க கூட்டாட்சியில் உள்ள டென்னசி பள்ளத்தாக்கு ஆணையத்தின் (டி.வி.ஏ) அறிவிப்பில், தொழில்நுட்ப வேலைகளில் 20 சதவீதத்தை வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யும் என்று அறிவித்துள்ளது.

டி.வி.ஏ-வின் நடவடிக்கை டென்னசியில் உள்ள 200க்கும் மேற்பட்ட திறமையான அமெரிக்க தொழில்நுட்பத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு தங்கள் வேலையை இழக்க நேரிடும். வெளிநாட்டு தொழிலாளர்கள் தற்காலிக வேலை விசாக்களில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்வது தீங்கு விளைவிக்கும். அதனால், ஏற்கனவே மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அவர்களின் வேலைகளை இழந்துள்ளனர் என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பரவலான அறிவுசார் சொத்து திருட்டில் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, முக்கியமான தகவல்களை உள்ளடக்கிய ஐ.டி வேலைகளை அவுட்சோர்சிங் செய்வது ஒரு தேசிய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

வெள்ளை மாளிகையின் அறிவிப்பின்படி, டிரம்பின் நடவடிக்கைகள் முதலாளிகளின் எச்1பி விசாக்களை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட உதவும். அவை ஒருபோதும் தகுதிவாய்ந்த அமெரிக்க தொழிலாளர்களை குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுடன் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

இந்த உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டபோது கலந்து கொண்டவர்களில் ஒருவர் அதிபரிடம், எச்1பி விசாவில் 70 சதவீதம் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு செல்கிறது என்று கூறினார்.

அதற்கு அதிபர் டிரம்ப், தகுதி அடிப்படையிலான குடிவரவு முறையை தான் விரும்புவதாகவும் இது அமெரிக்காவிற்குள் வேலைகளை உருவாக்கும் அமெரிக்கர்களின் வேலைகளை எடுக்காது என்றும் கூறினார்.

“நாங்கள் ஒரு குடியேற்ற மசோதாவை மிக விரைவில் விவாதிக்க உள்ளோம். அது பல விஷயங்களை உள்ளடக்கியது. அது மிகவும் விரிவான மசோதாவாக இருக்கும். அதனுடைய வார்த்தையை சிலர் விரும்புகிறார்கள். சிலர் வெறுக்கிறார்கள். ஆனால், அது எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்ற பொருளில் மட்டும் அது மிகவும் விரிவானதாக இருக்கும். இது தகுதியின் அடிப்படையில் இருக்கும்.” என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

மேலும் அவர், இந்த மசோதா மாநாட்டிற்குப் பிறகு கையெழுத்திடப்படும் என்றார்.

அதிபர் டிரம்ப் மேலும் கூறுகையில், “குடிவரவு மிகவும் தகுதி அடிப்படையிலானதாக இருக்கும். ஆனால் அது தொழிலாளர்களுக்கு சிறந்ததாக இருக்கும். நம்முடைய நாட்டிற்குள் வருபவர்களுக்கு இது மிகச் சிறந்ததாக இருக்கும். ஆனால், சட்டபூர்வமாக நம் நாட்டிற்கு வருவதும், நாட்டை நேசிப்பதும், மக்கள் வருவதை எதிர்த்து நம் நாட்டுக்கு உதவ விரும்புவதும் ஆகும். அவர்கள் நம் நாட்டை விரும்பமாட்டார்கள்” என்று டிரம்ப் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Us president donald trump signs executive order against hiring h1b visa holders for federal contracts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X