US President Trump again blames China Covid19 terms in Kung Flu : கடந்த ஆண்டு இறுதியின் சீனாவின் வுஹான் பகுதியில் ஒரு மர்ம காய்ச்சல் பரவ துவங்கியது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸாக பரவியிருக்கும் இந்நோயால் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கு 25 ஆயிரம் நபர்களுக்கு அதிகமானோர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்த பெருங்கொள்ளை நோயால் தொழிற்சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டு, பல நாடுகளில் பொருளாதாரம் சீரழிய துவங்கியுள்ளது. இதில் இருந்து மீண்டு வர பல நாட்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நோயின் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று ஆரம்பம் முதல் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், ஓகலகாமாவில் பேசிய போது, இவ்வைரஸை பலரும் பல பெயர்கள் வைத்து அழைக்கின்றனர். சிலர் வைரஸ் என்கிறார்கள். சிலர் காய்ச்சல் என்று கூறுகிறார்கள். ஆனால் என்னால் அந்த நோய்க்கு 19 பெயர்கள் வைக்க முடியும்.
Advertisment
Advertisements
ஏற்கனவே நம்மிடம் 18 வகையான பெயர்கள் இருக்கின்றன. தற்போது நான் இதற்கு குங் ஃப்ளூ என்று பெயரிடுகிறேன் என்று கூறி மீண்டும் சீனாவை வம்பிற்கு இழுத்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப். கொரோனா பரிசோதனைகளை குறைத்துக் கொண்டால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாகும் என்று கூறி சமீபத்தில் சர்ச்சையை கிளப்பினார் அவர். பொதுநலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை என்று கூறி அவரை விமர்சனம் செய்து வருகிறனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil