US Presidential Elections 2020 Gun Purchase Violence: ஆர்தர் பென்சன் தன்னை ஒரு "விருப்பமற்ற துப்பாக்கி உரிமையாளர்" என்று அழைக்கிறார். பென்சில்வேனியாவைச் சேர்ந்த 34 வயதான பென்சன் இந்த கோடையில் 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' போராட்டத்தைத் திட்டமிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக நின்ற 50 பேர், டிரம்ப் கொடிகளை ஏந்தி பெரிய தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருந்த 300 எதிர்ப்பாளர்களை ஈடுசெய்தனர். "அவர்கள் என் மீது துப்பாக்கி குண்டுகளை இறக்கியிருந்தால் அன்றைய தினம் என் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது" என்று பென்சன் குறிப்பிடுகிறார்.
பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் முதன்முறையாகத் துப்பாக்கிகளை வாங்குகிறார்கள், பரவலான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள், நாடெங்கிலும் தொற்றுநோய் பரவுதலுக்கு இடையே இவை அனைத்தும் நவம்பர் 3-ம் தேதி ஜனாதிபதித் தேர்தலுக்கு வழிவகுக்கும் பதட்டத்தை அதிகரித்தன.
செப்டம்பர் 2020 வரை துப்பாக்கி வாங்குவதற்கான பின்னணி சரிபார்ப்பு எண்ணிக்கை மார்ச் மாதத்திலும் (3.7 மில்லியன்), அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்திலும் (மொத்தம் 3.9 மில்லியன்) உயர்ந்தன என்பதை எஃப்.பி.ஐ கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகின்றன. ஏற்கெனவே கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களை (28.4 மில்லியன்) செப்டம்பர் வரையிலான பின்னணி சரிபார்ப்பு (28.8 மில்லியன்) எண்ணிக்கை தாண்டிவிட்டன. துப்பாக்கி வர்த்தக சங்கமான National Sports Shooting Foundation நடத்திய ஆய்வில், முதல் முறையாகத் துப்பாக்கி வாங்குபவர்கள் 40 சதவிகிதம் என்று கண்டறியப்பட்டது. இதில், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை அதிக எண்ணிக்கையைக் கொண்டிருந்தன.
இதேபோன்ற பின்னணி சரிபார்ப்பின் கடைசி உச்சநிலை 2016-ம் ஆண்டு, முந்தைய அமெரிக்கத் தேர்தலின்போது 27.5 மில்லியனாக இருந்தது.
“நான் துப்பாக்கி வைத்துக்கொள்பவனின் பெரிய ரசிகன் அல்ல. ஆனால், இந்த உரிமையை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்க நான் விரும்புகிறேன்”என்று பென்சன் கூறினார். "இந்த ஆண்டு சமூக அமைதியின்மை, எங்கள் மதிப்புகளைக் கேள்விக்குள்ளாக்குவது மற்றும் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள நாங்கள் என்ன செய்யத் தயாராக இருக்கிறோம் என்பது குறித்து நம்பமுடியாததாக உள்ளது"
வரையப்பட்ட தேர்தல் முடிவுகள் பதட்டத்தை அதிகரிக்கிறது. தனக்கு அறிமுகமானவர்களில் பலர் துப்பாக்கி உரிமையைப் பற்றி யோசிக்கிறார்கள் மற்றும் "உள்நாட்டுப் போர்" இருக்கக்கூடுமோ என்று கவலைப்படுகிறார்கள் என பென்சன் குறிப்பிடுகிறார். "சட்டத்தின் ஆட்சியைப் பற்றி அக்கறை கொள்ளாத மறுபக்கத்தை நீங்கள் பார்க்கும்போது, இந்த மக்கள் எவ்வளவு துயரத்தை எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திப்பீர்கள். இது உண்மையில் ஒரு கலாச்சாரப் போர்” என்றும் பென்சன் கூறினார்.
நான்கு நாட்களுக்கு முன்பு, சர்வதேச நெருக்கடி குழுவின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், “யு.எஸ். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது, அமைதியின்மைக்கான காரணிகள் ஏராளமாக உள்ளன. இருதரப்பிலும் வன்முறையில் இறங்கத் துடிப்பவர்கள் இந்த செயல்முறையைச் சீர்குலைக்கலாம்” என்று எச்சரித்தது.
இந்த மாத தொடக்கத்தில் உள்நாட்டு பாதுகாப்புத் துறை, உள்நாட்டு வன்முறை தீவிரவாதத்தை 'நாட்டின் அச்சுறுத்தல்' என்று பெயரிட்டது.
இதனைத் தொடர்ந்து, சோசியலிஸ்ட் ரைபிள் அசோசியேஷன் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கத் துப்பாக்கி சங்கம் போன்ற புதிய குழுக்கள் உட்பட இடதுசாரிகளின் சில பிரிவுகளும் துப்பாக்கிகளை வாங்குகின்றன.
தனக்கான ஷாட்கன் மற்றும் கைத்துப்பாக்கியை வாங்குவதில் அவருக்கு சிரமம் இல்லை என்றாலும், அதற்கான வெடிமருந்துகள் குறைவாகவே இருப்பதாக பென்சன் கூறுகிறார். முன்பு 50 சுற்றுகளுக்கு 15 டாலர் என இருந்தது, இப்போது 40 டாலராக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, வால்மார்ட் அதன் அலமாரிகளில் இருந்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளின் குறைந்த ஸ்டாக் "உள்நாட்டு அமைதியின்மை" சாத்தியத்தை மேற்கோளிட்டுள்ளது.
முதலில் ஜனாதிபதி விவாதத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை தேசியவாதிகளை வெளிப்படையாகக் கண்டிக்க மறுத்துவிட்டார். அமைதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கு அவர் ஒப்புக்கொள்வாரா என்று கேட்கப்பட்டால், ட்ரம்ப் வழக்கமாக “வாக்காளர் மோசடி” என்ற கூற்றுகளுடன் பதிலளிப்பார்.
அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தம் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் உரிமையை வழங்குகிறது. செய்திக்குறிப்புகளில் இந்த ஆண்டு புதிய துப்பாக்கி உரிமையாளர்கள் பெருகியதற்குக் காரணம் கறுப்பினத்தவர்கள் அல்லது பெண்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மிகவும் ஆபத்தான துப்பாக்கி சீர்திருத்தத் திட்டங்களில் ஒன்றான தாக்குதல் ஆயுதங்களுக்கான தடையை மீண்டும் கொண்டு வருவதாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். 1994-ம் ஆண்டு மசோதாவின் போது “எனது குடியரசுக் கட்சி நண்பர்கள் ஆரம்பத்திலிருந்தே இந்தச் சட்டத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அதிக நேரம் செலவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன்… ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அது துப்பாக்கிகள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, துப்பாக்கிகள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, துப்பாக்கிகள். நேற்று இரவு, துப்பாக்கிகள். இன்று காலை, துப்பாக்கிகள். இப்போது, துப்பாக்கிகள். வெறும் துப்பாக்கிகள், துப்பாக்கிகள், துப்பாக்கிகள், துப்பாக்கிகள், துப்பாக்கிகள்” என பைடன் கூறினார்.
பைடனின் பல நிகழ்ச்சி நிரல்களைப் போலவே, அவரது கருத்துக்களும் பல தசாப்தங்களாக ஜனநாயக பரிணாமங்களைப் பின்பற்றுகின்றன. தொடர்ச்சியான வடிவத்தில், முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் ஆட்சியின்போது இருந்ததைப் போலவே துப்பாக்கி கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்கான அழைப்புகள் பெரும்பாலும் துப்பாக்கி விற்பனையையே அதிகரிக்க வழிவகுத்தன. துப்பாக்கிகளுக்கு எதிர்ப்பை எழுப்பியது பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்தான்.
தனது கடைசி பெயரை நீக்குமாறு கோரிய ஜான், பழைய துப்பாக்கிகளை ஏந்திய வேட்டையாடும் குடும்பத்தில் வளர்ந்தவர். ஆனால், அவருடைய தந்தை “அவை மனிதர்களைக் கொல்வதற்கு மட்டுமே நல்லவை” என்று கைத்துப்பாக்கி வாங்க மறுத்துவிட்டார். 45 வயதான இவர், தன் 20 வயதில் “என் கேமரா மூலம் விலங்குகளைச் சுடப்போகிறேன்” என்றுகூறி வேட்டையாடுவதைக் கைவிட்டார். தன் நாட்டிற்கு "துப்பாக்கியுடனான தோற்று இருக்கிறது" என்றும் அதனால் "அவற்றைப் பெறுவது மிகவும் எளிது" என்றும் அவர் கூறுகிறார். ஆனால், இந்த ஆண்டு, அவர் 9 மிமீ மேக்னம் மற்றும் ஒரு சிறிய காலிபர் தானியங்கி துப்பாக்கியை வாங்கியுள்ளார்.
"என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் புதிய துப்பாக்கிகளை வாங்குகிறேன். ஏனென்றால் நான் GOP-ஐ நம்பவில்லை" என்று அவர் குடியரசுக் கட்சியைக் குறிப்பிடுகிறார். “எனது நாட்டிற்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது ஆனால், நான் தயக்கமின்றி என்னுடைய குடும்பத்தையும் நம் ஜனநாயகத்தையும் பாதுகாப்பேன். நான் 1933-ல் தீமையை (ஹிட்லரை) கண்டேன். அதன் மோசமான உருவத்தை மீண்டும் என்னால் காண முடிகிறது” என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.