வரலாற்றில் முதன்முறை… பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை மூளைச்சாவடைந்த ஒருவருக்கு பொருத்தியதில், அந்த சிறுநீரகம் நன்றாக இயங்கியதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ வரலாற்றில், முதன்முறையாக பன்றி சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்துகையில் எவ்வித எதிர்ப்பும் ஏற்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சி மருத்துவச் சிகிச்சை வரலாற்றில் மிகப்பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இருதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், பல ஆண்டுகளாகவே விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முயற்சி வெற்றி மூலம், மனித உறுப்பு பற்றாக்குறையைப் போக்கிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு லங்ஓன் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை மூளைச்சாவடைந்த ஒருவருக்கு பொருத்தியதில், அந்த சிறுநீரகம் நன்றாக இயங்கியதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதனின் ரத்தநாளங்களுடன் பன்றியின் உறுப்பைப் பொருத்துவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து வயிற்றுக்கு வெளியே தொடையின் மேல் பகுதியில் அந்த சிறுநீரகம் மூன்று நாள்கள் வைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.

மனிதருக்குப் பொருத்தப்படும் சிறுநீரகத்தில் எதிர்பார்க்கப்படும் சிறுநீர் அளவு, பன்றியின் சிறுநீரகத்திலும் காண முடிந்ததாகவும், அந்நபருக்கிருந்த மோசமான சிறுநீரக செயல்பாட்டைவிட, புதிதாக பொருத்தப்பட்ட பன்றி சிறுநீரகத்தின் செயல்பாட்டில் முன்னேற்றம் இருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் உறுப்பு மாற்றுக்காகக் காத்திருக்கிறார்கள். இதில் 90,000 க்கும் மேற்பட்ட சிறுநீரகங்களாக தான் காத்திருக்கின்றன. சிறுநீரகத்திற்கு சராசரியாக மூன்று முதல் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

மரபணு மாற்றப்பட்ட பன்றிகள், கால்சேஃப் என அழைக்கப்படுகிறது. இது யுனைடெட் தெரபியூட்டிக்ஸ் கார்ப்ஸ் ரிவிவிகர் பிரிவால் உருவாக்கப்பட்டது. இதற்கு, டிசம்பர் 2020 இல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகாரம் வழங்கியது. இது இறைச்சி ஒவ்வாமை உள்ளவர்களுக்கு உணவாகவும், மனித சிகிச்சையின் சாத்தியமான கூற்றுகளை கண்டறிய பயன்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்டது.

பன்றிகளிடமிருந்து உருவாக்கப்பட்ட மருத்துவப் பொருட்கள் மனிதர்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன்பு குறிப்பிட்ட FDA ஒப்புதல் வாங்கப்படவேண்டும்.

மேலும், கால்சேஃப் பன்றிகளை இதய நோயாளிகளுக்கான இதய வால்வு பிரச்சினை முதல் தோல் ஒட்டுக்கள் வரை எல்லாவற்றுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்த முடியும் என சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கான அனுமதியை மூளைச்சாவு அடைந்த நபரின் குடும்பத்தினரிடம் பெறுவதற்கு முன்பு, ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ நெறிமுறையானார்கள், சட்ட மற்றும் மத வல்லுநர்களுடனுடன் இந்த முயற்சி குறித்துக் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Us surgeons successfully test pig kidney transplant in human patient

Next Story
பாங்காக்: சாலையோர உணவகங்களுக்கு தடையில்லை… சுகாதாரமான உணவு வழங்க அட்வைஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com