US tops 500000 virus deaths matching the toll of 3 wars : அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போர், கொரியா மற்றும் வியட்நாம் போர்களில் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கைக்கு சமம். இரண்டாம் உலகப்போரில் 4,05,000 அமெரிக்கர்களும், வியட்நாம் போரில் 58 ஆயிரம் அமெரிக்கர்களும், கொரிய போரில் 36 ஆயிரம் அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க அரசு அலுவலகங்களில் 5 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் அந்நாட்டின் கொடிகளை பறக்க உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி, அமைதியாக இறந்தவர்களுக்கு திங்கள் கிழமை அன்று மௌன அஞ்சலி செலுத்தினார்.
கடந்த வாரம் மிக மோசமான வானிலையால் மருத்துவமனைகள் மூடப்பட்டு, தடுப்பூசி டெலிவரி செய்வது குறைக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கான தடுப்பூசிகளை பெறுவதில் தாமத்தை சந்தித்தனர். தற்போது அமெரிக்க அரசு தடுப்பூசிகளை விரைவில் செலுத்த தேவையான வேலைகளை இரட்டிபாக்கியுள்ளது. இந்நிலையில் இறப்பு விகிதம் குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் புள்ளி விபரங்களை வெளியிட்டது.
டிசம்பர் மத்தியிலேயே தடுப்பூசிகள் விநியோகம் துவங்கப்பட்ட நிலையிலும் கூட வாசிங்டன் பல்கலைக்கழகம், ஜூன் 1ம் தேதிக்குள் இறப்பவர்களின் எண்ணிக்கை 5,89,000 ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.
அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை தான் உலக அளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆகும். உலகம் முழுவதும் 2.5 மில்லியன் நபர்கள் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அதில் 20% இறப்புகள் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. உண்மையான இறப்புகள் இதைவிட அதிகமாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ஏன் என்றால் கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் கண்டு கொள்ளப்படவில்லை.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் முதன் முதலில் 2020 பிப்ரவரியில் இறப்பு ஏற்பட்டது. முதல் ஒரு லட்சம் இறப்புகள் ஏற்பட நான்கு மாதங்கள் ஆகின. 2 லட்சம் என்ற எண்ணிக்கை செப்டம்பரிலும், டிசம்பரில் 3 லட்சம் என்ற எண்ணிக்கையையும் எட்டியது. 3 லட்சத்தில் இருந்து நான்கு லட்சம் இறப்புகள் ஏற்பட வெறும் ஒரே ஒரு மாதம் தான் ஆனது. 5 லட்சம் என்ற எண்ணிக்கையையும் ஒரே மாதத்தில் எட்டியது அமெரிக்கா.
கடந்த சில வாரங்களாக இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஜனவரியில் நாள் ஒன்றுக்கு 4000த்திற்கும் அதிகாம இறப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு கொரோனாவால் 1900 பேர் மரணிக்கின்றனர்.
மேலும் படிக்க : தமிழக நிலைமை என்ன? 5 மாநிலங்களில் மட்டும் 86% கொரோனா பாதிப்பு
ஆனால் மாற்றம் அடைந்த வைரஸால் இந்த போக்கினை மாற்றி அமைக்க முடியும். , தடுப்பூசி அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அமெரிக்கர்கள் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
விடுமுறை காலங்கள் கொரோனா இறப்பு மற்றும் தொற்றுகள் குறைவுக்கு காரணம் என்று கூறுகின்றனர். பலரும் இந்த குளிர்காலத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. முகக்கவசங்கள் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதாலும் இது குறைந்துள்ளது என்று கூறுகின்றனர்.
இறப்புகள் இவ்வளவு அதிகமாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்று லெக்ஸிங்டனில் பணியாற்றும் மருத்துவர் ரேயன் ஸ்ண்டாண்டன் கூறுகிறார். இரண்டு மாதங்களுக்கு மட்டுமே இப்படி இருக்கும் என்று நினைத்த பலரில் நானும் ஒருத்தர். இது நம்மை அழிப்பதற்கு முன்பு நாம் இதனை வென்றுவிடுவோம் என்று நினைத்திருந்தேன் என்று அவர் கூறினார்.
ஹட்சின்சன் ரீஜினல் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் க்றிஸ்டி, குறைந்து வரும் நோய் தொற்று குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்பட்டு வருவது குறித்தும் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
பனிப்பொழிவு, மோசமான வானிலை, மற்றும் காலநிலையால் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு போன்றவற்றால் சில தடுப்பூசி மையங்கள் செயல்படவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லவேண்டிய தடுப்பூசிகள் தேக்கம் அடைந்துள்ளது.
இதனால் முதல் தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 14 முதல் 21 கால கட்டத்தில் 20% ஆக குறைந்துள்ளது என்று அமெரிக்க நோய் தடுப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 6 மில்லியன் தடுப்பூசிகளில் ஒரு பகுதி முற்றிலுமாக முறையான இடங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இந்த வார இறுதிக்குள் அவை கொண்டு சேர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது அந்நாடு.
இதுவரையில் 44 லட்சம் அமெரிக்கர் ஃபைசர் அல்லது மொடெர்னா தடுப்பூசியை பெற்றுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் முதன்முறை அல்லது இரண்டாம் முறையாக 1.6 நபர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்தால் தேசிய அளவில் தடுப்பூசி விநியோகம் மேலும் அதிகரீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் இறுதிக்குள் 20 மில்லியன் தடுப்பூசிகள் கொரோனா தடுப்பூசியை வழங்க தயார் நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் 100 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்க போதுமான வசதிகள் இருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்த எண்ணிக்கை பெரிய அளவில் அரசு அதிகாரிகளுக்கு, இளைஞர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை போடுவதற்கான கையிருப்புகளை வைத்திருக்க உதவும். உலகம் முழுவதும் சுமார் 1 பில்லியன் தடுப்பூசிகளை தர திட்டமிட்டுள்ளது ஜான்சன் நிறுவனம். அமெரிக்க சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு மையம் இந்த தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு முறை மட்டுமே செலுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி தான். ஃபைசர் மற்றும் மொடெர்னா இரண்டும் இரண்டாம் தடுப்பூசிகளை சில வார இடைவெளிக்குள் மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil