உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் டோக்கியோவில் பேரணி நேற்று நடத்தினர்.
ரஷ்யா, ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
அவர்கள், “போரை நிறுத்துங்கள். உயிர்களைப் பாதுகாக்கவும். " சிலர்" நாங்கள் உக்ரைனுடன் நிற்கிறோம்" என்று எழுதப்பட்ட பலகைகளுடன் பேரணி நடத்தினர்.
ரஷியாவில் மாஸ்டர் கார்டு செயல்பாடுகள் திடீர் நிறுத்தம்
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 11 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 11 நாளில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது ரஷியா. அதே நேரம் உக்ரைனும் ஈடுகொடுத்து போராடி வருகிறது.
இந்நிலையில், ரஷியாவில் வரவிருக்கும் நாட்களில் விசா கார்டு நிறுவனம் பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் என விசா நேற்று கூறியது.
விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷியாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது. வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷியாவிற்குள் வேலை செய்யாது என அறிவித்துள்ளது.
இதேபோல், உக்ரைன் மீதான ரஷிய போர் அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரக்கூடியது எனக் கூறிய மாஸ்டர்கார்டு, விசாவைப் போலவே மாஸ்டர்கார்டு தடையும் இருக்கும் என அறிவித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது அதன வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
11-வது நாளாக நீடிக்கும் போர்: அமெரிக்க அதிபருடன் உக்ரைன் அதிபர் பேச்சு
11ஆவது நாளாக போர் நீடித்துவரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அமெரிக்காவின் ஆயுத உதவி,
அவரிடம் பாதுகாப்பு, உக்ரைனுக்கான நிதியுதவி, ரஷி யாவுக்கு எதிராக தொடர் தடைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன் என குறிப்பிட்டுள்ளார்.
போர் தாக்குதல் தொடர்பாக ரஷியா - உக்ரைன் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு: 44.54 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44.54 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 44,54,28,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,82,94,088 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 60 லட்சத்து 15 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 6,11,18,528 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 72,020 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் மசூதி ஒன்று உள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் மசூதிக்குள் நுழைய முயன்றனர்.
உக்ரைன் போர்… பொதுமக்கள் வெளியேற தற்காலிக போர் நிறுத்தம் – ரஷ்யா
அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 45 பேர் உடல் சிதறி பலியானதாகவும், 65 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 62 ஆக அதிகரித்துள்ளது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் மசூதியில் நடந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். கோரசான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.