சர்வதேச மாணவர்களின் விசா கொள்கை : டிரம்ப் நிர்வாகம் அதிரடி ரத்து

US international students visa policy : 2018-19ம் கல்வியாண்டில் மட்டும் அமெரிக்காவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வந்துள்ளனர்

By: July 15, 2020, 1:18:40 PM

அமெரிக்காவில் படித்து வரும் சர்வதேச நாடுகளின் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜூலை 6ம் தேதி, அதிபர் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. வகுப்புகளுக்கு மாணவர்கள் வரவேண்டும் என்று பெடரல் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைகழகம், மசாசூசெட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் முறையிலேயே இனி வகுப்புகள் நடக்க இருப்பதால், இங்கு படித்து வரும் சர்வதேச நாடுகளின் மாணவர்கள், அவரவர்களது நாடுகளுக்கு திரும்பிச்செல்லுமாறு, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை, மற்றும் அமெரிக்க குடியமர்வு மற்றும் சுங்க அமலாக்கத்துறை, கடந்த ஜூலை 6ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

ஹார்வார்டு பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த உத்தரவு உடனடியாக திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆலிசன் பரோக்ஸ், இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பை தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தீர்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு. சர்வதேச மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் , பாமர மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அமெரிக்கா நாடாளுமன்ற எம்பி பிராட் ஸ்னீடர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகம், மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் முடிவுகளை எடுக்க வேண்டுமே தவிர, இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற அடிப்படையில் இன்று ஒரு முடிவு எடுத்து நாளை அதை விலக்கிக்கொள்வது நிர்வாகத்திற்கு அழகல்ல என்று ஸ்னீவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த உத்தரவுக்கு எதிராக, 136 நாடாளுமன்ற எம்பிக்கள், 30 செனட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்த தீர்ப்பு. மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், உயர்கல்வி அமைப்புகள் உள்ளிட்டவைகளுக்கு கிடைத்த வெற்றி, அமெரிக்காவில் சமீபத்தில் நிகந்த இனவெறி படுகொலை விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காங்கிரஸ் எம்பி அயனா பிரெஸ்லி குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளின் மூலம், இங்கு தங்கியுள்ள மாணவர்களை அவர்களது நாட்டுக்கு செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது என்று நாடாளுமன்ற எம்பி மிக்கி ஷெரில் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு, அமெரிக்காவில் தங்கிபடிக்கும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 2018-19ம் கல்வியாண்டில் மட்டும் அமெரிக்காவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஜனவரி வரையிலான காலகட்டத்தில், Student and Exchange Visitor Program (SEVP) அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 1,94,556 இந்திய மாணவர்கள் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 6ம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில் அமெரிக்க குடியமர்வு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அமைச்சகம், வகுப்புகள் இனி ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதால் மற்ற நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அதற்கேற்ப மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்த உத்தரவால், பெரும்பாலான நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவானது.

அமெரிக்காவின் அறிவியல், தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், சுகாதாரம், வர்த்தகம், நிதி. கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மற்ற நாடுகளை சேர்ந்த மாணவர்களே அதிகம் படித்துவந்ததால், இந்த உத்தரவால், நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்த உத்தரவின் மூலம் தங்களது பணிவாய்ப்பு, புதிய பணியாட்கள் தேர்வு முறை, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடைமுறை உள்ளிட்டவைகளில் சிக்கல் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க மாணவர்கள், சர்வதேச நாட்டு மாணவர்களுக்கு போட்டியாக விளங்காத நிலையில், இந்த உத்தரவு பெரும் பாதகத்தையே விளைவிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Trump administration rescinds international students visa policy

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Usa president donald trump us international students visa policy visa policy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X