Advertisment

வட கொரியாவுக்கு ஆதரவு; ஒரு இந்தியர், 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை… உலகச் செய்திகள்

வட கொரியாவுக்கு ஆதரவு; ஒரு இந்தியர், 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை; முன்னாள் காதலியின் வருங்கால கணவர் வீட்டு முன் தீ வைத்த இந்திய வம்சாவளியினர் கைது… இன்றைய உலகச் செய்திகள்

author-image
WebDesk
New Update
வட கொரியாவுக்கு ஆதரவு; ஒரு இந்தியர், 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை… உலகச் செய்திகள்

இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.

Advertisment

வட கொரியாவுக்கு ஆதரவு; 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

வட கொரியாவின் அரசாங்கத்தால் நடத்தப்படும் அனிமேஷன் ஸ்டுடியோவிற்கு பொருள் ஆதரவை வழங்கியதற்காக, அதன் சார்பாகச் செயல்பட்டதற்காக அல்லது அதற்குச் சொந்தமானதாக இருந்ததற்காக ஒரு இந்திய நாட்டவர் உட்பட இரண்டு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்தது.

வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, DPRK (கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு) அரசாங்கத்தால் நடத்தப்படும் அனிமேஷன் ஸ்டுடியோவான SEK ஸ்டுடியோவிற்கு பொருள் ஆதரவை வழங்கியதற்காகவோ, சார்பாக செயல்படுவதற்காகவோ அல்லது அதற்குச் சொந்தமானதாக இருந்ததற்காகவோ, இரண்டு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

முன்னாள் காதலியின் வருங்கால கணவர் வீட்டு முன் தீ வைத்த இந்திய வம்சாவளியினர் கைது

30 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசிப்பவர், தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்கு முன் அவரின் வருங்கால கணவரின் அபார்ட்மெண்டிற்கு வெளியே தீ வைத்த குற்றத்திற்காக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

சுரேந்திரன் சுகுமாரன் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கக் கூடும் என்பதை அறிந்தே தீயிட்டுக் கொடுமை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தண்டிக்கப்பட்டார் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

சுரேந்திரன் சுகுமாரன் தனது முன்னாள் காதலி திருமணம் செய்துகொண்டதை அறிந்ததும் கோபமும் பொறாமையும் நிறைந்த அவர், அவரது வருங்கால கணவர் வசித்த பொது வீட்டுப் பிரிவிற்கு வெளியே தீ மூட்டினார்.

இங்கிலாந்தில் விபத்து ஏற்படுத்திய இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை

தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கடலோர நகரத்தில் போதைப்பொருள் உட்கொண்டதால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுத்தியதில், கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தந்தையின் மரணத்திற்கு காரணமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

publive-image

உள்ளூர் காவல்துறையினரின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதம் கென்ட்டின் ராம்ஸ்கேட்டில் நித்தேஷ் பிசென்டரி தனது கருப்பு ஆல்ஃபா ரோமியோவின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுத்தினார். இதில் இருவருர் மரணமடைந்த நிலையில், இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து வியாழக்கிழமை 31 வயதான இந்திய வம்சாவளியினருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனைக்குப் பிறகு அவர் 10 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட தகுதியற்றவர் ஆவார்.

கால்பந்து பத்திரிக்கையாளர் மரணம்

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கால்பந்து எழுத்தாளர்களில் ஒருவரான கிராண்ட் வால், அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து இடையேயான உலகக் கோப்பை போட்டியின்போது சனிக்கிழமை அதிகாலை இறந்தார்.

publive-imagepublive-image

லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் உள்ள மீடியா ட்ரிப்யூனில் கூடுதல் நேரத்தில் வால் மீண்டும் தனது இருக்கையில் விழுந்துவிட்டதாகவும், அவருக்கு அருகில் இருந்த செய்தியாளர்கள் உதவிக்கு அழைத்ததாகவும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

அவசர சேவை ஊழியர்கள் மிக விரைவாக முதலுதவி அளித்த நிலையில், கிராண்ட் வால் இறந்துவிட்டதாக பின்னர் செய்தியாளர்களிடம் கூறப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India England America World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment