Advertisment

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க துணை அதிபரின் மனைவி: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்...

அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜே.டி. வான்ஸின் மனைவியான உஷா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் குறித்த தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Usha vance

கடந்த புதன்கிழமையன்று அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல், துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் 40 வயதிலேயே துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை ஜே.டி. வான்ஸ் பெற்றுள்ளார். இந்நிலையில், அவரது மனைவியான உஷா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் குறித்த தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: 3 things to know about Usha Vance, wife of US Vice President-elect JD Vance

 

உஷாவின் குடும்பம் மற்றும் கல்வி:

உஷாவின் பெற்றோர் கடந்த 1980-களில் ஆந்திராவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள். ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பணியாற்றி வரும் ஷ்ருதி ராஜகோபாலன் என்பவர், உஷாவின் பெற்றோர் குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார். 

அதன்படி, "உஷா சிலுகுரி சான் டியாகோவில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர்கள். உஷா சிலுகுரியின் தந்தையான க்ரிஷ் சிலுகுரி என்பவர் சென்னை ஐஐடியின் விண்வெளி பொறியாளர். அவரது தந்தையான சிலுகுரி ராமசாஸ்திரி என்பவர் ஐஐடி உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவர். இயற்பியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அவரது பெயரில் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. உஷாவின் தாயாரான லட்சுமி, கடல் சார் உயிரியலாளர். அவர் சான் டியாகோவில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.  உஷாவின் பெரிய அத்தை, தனது 96 வயதிலும் விசாகபட்டினத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாஸ்திரியின் தம்பியான சிலுகுரி சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு துறையில் பணியாற்றியவர். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர், ஆந்திராவின் ஆர்.எஸ்.எஸ் பிரிவின் தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி நியூயார்க் டைம்ஸின் தகவலின் படி, உஷா தனது சிறு வயதில் இருந்தே தலைமைப் பண்பு நிறைந்தவராகவும், புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் விளங்கியுள்ளார். 

உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாறு பயின்றுள்ளார். இதேபோல், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். கல்வி பயிலும் காலங்களில் உஷா இடதுசாரிய வட்டங்களில் காணப்பட்டதாக தி நியூயார்க் டைம்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தனது கணவருக்கு ஆதரவாக செயல்பட்டதை தவிர்த்து தனது அரசியல் நிலப்பாடு குறித்து உஷா அண்மை காலத்தில் தெரிவிக்கவில்லை.

உஷா மற்றும் ஜே.டி. வான்ஸ் சந்திப்பு:

2010-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை யேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது, ஜே.டி. வான்ஸை உஷா முதன்முறையாக சந்தித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக, 'ஹில்பில்லி எலிஜி' என்ற தலைப்பில் நினைவுக் குறிப்பை எழுதியதன் மூலம் வான்ஸ் அறியப்படுகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த வான்ஸ், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்கிறார். பல சவால்களைக் கடந்த இளங்கலை பட்டம் பெற்ற வான்ஸ், யேல் பல்கலைக்கழகத்திற்கு சட்டம் பயில செல்கிறார். 

உஷாவுடனான சந்திப்பு குறித்து வான்ஸ் எழுதியுள்ளார். அதில், "என் வகுப்பில் பயிலும் உஷாவிடம் நான் காதல் வயப்பட்டேன். இதில் அதிர்ஷ்டவசமாக, அசைன்மென்ட் எழுதுவதற்கு நாங்கள் இருவரும் ஒன்றாக நியமிக்கப்பட்டோம். இதனால் நாங்கள் ஒன்றாக நேரம் செலவிடவும், ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. மனிதர்களிடம் இருக்க வேண்டிய அனைத்து நல்லவிதமான குணாதிசயங்களும் உஷாவிடம் இருந்தது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

யேல் பல்கலைக்கழகம் போன்ற உயர் நிறுவனத்தில் தன்னை சிறப்பாக உணர வைத்தது உஷா தான் என வான்ஸ் தெரிவித்துள்ளார். தனக்கு அன்னியமாக தோன்றும் இடங்களில் உஷா தன்னோடு இருந்தால், அவை தனது வீடு போல் காட்சியளிக்கும் எனவும் வான்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வான்ஸ் தனக்காக சைவ உணவிற்கு தன்னை மாற்றிக் கொண்டதாகவும், தனது தாயாருக்கு இந்திய உணவுகளை சமைத்து கொடுத்ததாகவும் உஷா தெரிவித்திருந்தார்.

தான் எழுதிய புத்தகங்கள் மற்றும் தனது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உஷா தான் காரணம் என வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

உஷாவின் பணிகள்:

அமெரிக்க சட்ட நிறுவனங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் எழுத்தராக உஷா பணியாற்றியுள்ளார். ட்ரம்ப் மற்றும் வான்ஸின் குடியரசு கட்சிக்கு பன்முகத்தன்மை கொடுக்ககூடியவராக உஷா விளங்கியதாக கூறப்படுகிறது. "இந்திய-அமெரிக்கர்களுக்கு தற்போது அமெரிக்காவில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அவர்கள் பெரும்பாலும் ஜனநாயகவாதிகளாக இருக்கிறார்கள்" என கருத்துக்கணிப்புகள் நடத்திய ஜான் ஜோக்பி தெரிவித்துள்ளார். பரப்புரைகளின் போது இவான்கா ட்ரம்ப் மற்றும் மெலனியா ஆகியோரிடமிருந்து உஷா தனித்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

America Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment