இலங்கையின் வன்னி கொடூரத்தை ஆவணப்படுத்தும் ஒரு கிராஃபிக் நாவல்

செப்டம்பர் 2008 இல், இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்.டி.டி.இ) இடையேயான யுத்தம் இலங்கையின் வடக்குப் பகுதியில்அதிகரித்தபோது, ஐ.நா. செயற்பாட்டாடாளர்கள் வன்னி, கிளிநொச்சி பகுதியிலிருந்து வெளியேறத் தொடங்கினர். அவர்களில் பெஞ்சமின் டிக்ஸ் ஒருவராக இருந்தார்.

vanni: a family's struggle through the sri lankan conflict graphic novel, vanni: a family's struggle through the sri lankan conflict benjamin dix, வன்னி, இலங்கைப் போர், வன்னி கிராஃபிக் நாவல், பெஞ்சமின் டிக்ஸ், லிண்ட்சே பொல்லாக், sri lankan civil war, sri lankan civil war ltte, lindsay pollock benjamin dix, un workers lindsay pollock benjamin dix, sri lankan civil war graphic novel, sri lankan civil war, Tamil indian express
vanni: a family's struggle through the sri lankan conflict graphic novel, vanni: a family's struggle through the sri lankan conflict benjamin dix, வன்னி, இலங்கைப் போர், வன்னி கிராஃபிக் நாவல், பெஞ்சமின் டிக்ஸ், லிண்ட்சே பொல்லாக், sri lankan civil war, sri lankan civil war ltte, lindsay pollock benjamin dix, un workers lindsay pollock benjamin dix, sri lankan civil war graphic novel, sri lankan civil war, Tamil indian express

அம்ரிதா தத்தா
செப்டம்பர் 2008 இல், இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்.டி.டி.இ) இடையேயான யுத்தம் இலங்கையின் வடக்குப் பகுதியில்அதிகரித்தபோது, ஐ.நா. செயற்பாட்டாளர்கள் வன்னி, கிளிநொச்சி பகுதியிலிருந்து வெளியேறத் தொடங்கினர். அவர்களில் பெஞ்சமின் டிக்ஸ் ஒருவராக இருந்தார். அவர் சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 2004 ஆம் ஆண்டில் இலங்கைத் தீவுக்கு வந்திருந்தார். அப்போது, மேலும் மோதல் மோசமடைந்திருந்தது.

விடுதலைப் புலிகளின் கீழ் இருந்த பகுதிகள் இலங்கை அரசின் காட்டுப்பாட்டில் வந்தபோது ஐ.நா. செயல்பாட்டாளர்கள் பாதிப்புக்கு இலக்காகக்கூடிய பல தமிழர்களை விட்டுவிட்டு அந்நாட்டிலிருந்து வெளியேறினார்கள்.

“நான் எடுத்த புகைப்படங்கள், அறிக்கைகள், என் சொந்த அனுபவங்கள் தமிழ் சமூகத்தினுடனான எனது உறவு ஆகியவற்றுடன் வன்னியை விட்டு வெளியேறினேன்… செப்டம்பர் 16, 2008 அன்று ஐ.நா.வின் கடைசிப் படகில் நான் கிளிநொச்சியிலிருந்து வெளியேறியபோது ஆழ்ந்த அவமானமும் குற்ற உணர்வும் என்னை மூழ்கடித்தன” என்று லண்டனில் வசிக்கும் டிக்ஸ் நினைவு கூர்ந்தார்.

ஒரு வருடம் கழித்து, தென் சூடானில் பணிபுரிந்தபோது, இலங்கை இராணுவத்தின் இறுதி அணிவகுப்பை தொடர்ந்து கவனித்தார். கிளிநொச்சி விழுந்தவுடன், சுமார் 3,00,000 பொதுமக்கள் கடற்கரையில் போர் இல்லாத பகுதிகளுக்கு தள்ளப்பட்டனர். எல்.டி.டி.இ மக்களை மறைமுகமாகப் பயன்படுத்தினாலும், பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்படாது என்ற மஹிந்த ராஜபக்சே அரசாங்கத்தின் வாக்குறுதி பொய் என நிரூபிக்கப்பட்டது. சர்வதேச சாட்சிகளையும் ஊடகங்களையும் அகற்றிவிட்டு அவர்கள் பொதுமக்கள் இருந்த இலக்குகளில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்பதை உலகுக்கு உணர்த்துவதன் மூலம், அவர்கள் புலிகளை ஒழித்தது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களைக் கொன்று பெரிய அளவில் சேதப்படுத்தினர்.” என்று 43 வயதான டிக்ஸ் கூறினார்.

சர்வதேச ஊடகங்களைப் பொறுத்தவரை, நடந்த போர் பெரும்பாலும் ஒரு பயங்கரவாத அமைப்பிடமிருந்து சுதந்திரம் பெற்ற கதையாக இருந்தது. ஆனால், அவை இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நடவடிக்கையில், தொடர்ச்சியான ஷெல் தாக்குதலில் பலர் இறந்தனர் அல்லது தடுப்பு முகாம்களில் காணாமல் போனார்கள் என்று டிக்ஸ் அறிந்திருந்தார்.

கிளிநொச்சியில் உள்ள ஒரு பதுங்கு குழியில் அவர் படித்த தனது முதல் கிராஃபிக் நாவல்களான ஆர்ட் ஸ்பீகல்மேனின் மௌஸ் (1980) மற்றும் ஜோ சாக்கோவின் பாலஸ்தீனம் (1993) ஆகியவற்றுடன் புரிந்துகொள்கிறார்.

“சிக்கலான மற்றும் துயரமான வரலாறுகளை புதுமையான வழிகளில் எப்படி சொல்ல முடியும் என்பதை நான் அறிந்தேன். இடம்பெயர்ந்த மக்கள், படுகொலை, ஐ.நா.வில் நம்முடைய இயலாமை மற்றும் மனித துயரத்தின் பல கதைகளை சித்தரிக்கும் வகையில் வன்னியில் நான் பார்த்ததை ஒரு கிராஃபிக் நாவலாக மாற்ற விரும்புகிறேன் என்பதை நான் உணர்ந்தேன்”என்று டிக்ஸ் கூறினார்.

இதன் விளைவாக, சமீபத்தில் வெளியான வன்னி: இலங்கை மோதல் மூலம் ஒரு குடும்பத்தின் போராட்டம் என்ற (பெங்குயினின் ரேண்டம் ஹவுஸ்), இது ஓவியர் லிண்ட்சே பொல்லாக் (39) படங்களுடன் இணைந்து டிக்ஸ் எழுதியது. இது செம்பியன்பட்டு – ரஞ்சன் மற்றும் அன்டோனி ராமச்சந்திரன், மற்றும் அவர்களின் குழந்தைகள் தீபா மற்றும் மைக்கேல் ஆகியோரில் உள்ள ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது. அவர்களும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் வாழ்க்கையிலிருந்து துடைக்கப்படுகிறார்கள். உறவினர் பாதுகாப்பிலிருந்து இடம்பெயர்வு, பயங்கரவாதம் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கான அவர்களின் பயணம் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவில் உள்ள 20 குடும்பங்களுடனான நேர்காணல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

“லண்டனில் உள்ள சித்திரவதையிலிருந்து சுதந்திரம் என்ற அமைப்பில் தமிழ் மக்களை நாங்கள் சந்தித்தோம் – அவர்கள் இலங்கை அரசின் கைகளில் தாங்கள் பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் அல்லது படமாக்கப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. அவற்றை நான் செறிவுடன் கேட்க வேண்டியிருந்தது. பூட்டப்பட்ட அந்த அறைகளில் அது எப்படி இருக்க வேண்டும், அதன் வாசனை ஆகியவற்றை எப்படி உணர்ந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்ய முயற்சித்தேன். பிணைக்கப்பட்டு உதவியற்ற அந்த மக்களுக்கு இதை ஒரு வாழ்க்கை கனவாக நான் காட்சிப்படுத்த முயற்சித்தேன்” என்கிறார் பொல்லாக்.

இதில் எந்தவொரு கலைஞரும் தங்கள் ஆராய்ச்சிக்காக இலங்கைக்குச் செல்லவில்லை. அது அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் செல்லவில்லை.

“லிண்ட்சேவும் நானும் தமிழகத்திற்குச் சென்று தமிழ் அகதிகளை நேர்காணல் செய்வதில் நிறைய நேரம் செலவிட்டோம். அவர்களில் பலர் வன்னியில் இருந்த காலத்திலிருந்தே எனக்குத் தெரிந்தவர்கள். நாங்கள் ஒரு ராயல் என்ஃபீல்ட் பைக்கில் தமிழ்நாட்டின் உட்புறங்களைச் சுற்றி வந்தோம். எனவே கிராமப்புற தமிழ் வாழ்க்கையை நம்பகத்தன்மையுடன் விளக்குவதற்கு லிண்ட்சே அன்றாட வாழ்க்கையின் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது”என்கிறார் டிக்ஸ்.

வன்முறையின் காட்சி அனுபவம் பார்வையாளரைக் பாதிக்கும் மேலும் பரிதாபத்தை சிக்கலாக்கும். பெரும்பாலும் போருக்கு எதிரான படம் என்று எதுவும் இல்லை என்பது (திரைப்படத் தயாரிப்பாளர் ஃபிராங்கோயிஸ்) ட்ரஃபாட் என்பவரால் அடிக்கடி கூறப்படும் மேற்கோள். நான் அதைப் பற்றி நிறைய யோசித்தேன். வன்முறையை கவர்ச்சியாகவோ அல்லது உற்சாகமாகவோ மாற்றக்கூடாது என்பதில் நான் அக்கறை கொண்டிருந்தேன்.” என்கிறார் பொல்லாக். ஸ்மார்ட்போன்கள் மற்றும் மலிவான வீடியோ தொழில்நுட்பத்தின் வருகைக்கு முன்னர் இலங்கைப் போர் நடந்தது, இது இலங்கை அரசாங்கத்தை யுத்த வலயத்திலிருந்து ஊடகவியலாளர்களைத் தவிர்ப்பதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை திறம்பட செயல்பட அனுமதித்தது.

ஆனால், இணையத்தில் இன்னும் கொடூரமான புகைப்படங்கள் காணக் கிடைக்கிறது. மக்கள் – பொதுமக்கள் – கனரக ஆயுதங்களுக்கு இரையானார்கள். அல்லது கொடூரமாக துக்கிலிடப்பட்டு அழுகவிடப்பட்டனர். இந்த திட்டத்தின் தொடக்கத்தில் நான் படங்களால் மாற்றப்பட்டேன். நான் வரையக்கூடிய எதையும் விட அவர்கள் ஒரு உண்மையை மிகவும் ஆழமாகப் பேசினார்கள் என்று நினைத்தேன். துயரத்தின் மகத்தான தன்மையை சிந்திக்க முட்டாள்தனமாக இருந்தது. இன்னும் என்ன சொல்ல இருக்கிறது? ஆனால், உண்மையில், திகில் மிகவும் மறைக்கிறது. முக்கியமாக, இறந்தவர்களின் மனிதநேயம். மற்றும் உயிருள்ள மனிதர்களின் மனிதநேயம். அனைவருக்கும் போருக்கு முன்பு மற்றொரு வாழ்க்கை, மற்றொரு அடையாளம் இருந்தது” என்கிறார் பொல்லாக்.

மௌஸின் சிக்கலான உருவகமான கதைசொல்லலைக் காட்டிலும் நேராக அறிக்கையிடும் முறை வன்னியை உயிர்ப்பிக்கிறது. சுனாமிக்கு முந்தைய வடக்கு இலங்கையில் ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தபோது இந்த கதை தொடங்குகிறது. அங்கு புலிகள் மக்களுடன் எளிதில் கலக்கிறார்கள். ஆனால், போரின் இறுதி நாட்களில் உச்சகட்டமாக இருக்கும் ஒரு நேர்கோட்டு கதைக்கு தன்னைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வன்னி இடைவிடாத வன்முறையால் பெரும்பாலும் மூழ்கிவிடுகிறது. அந்த அளவுக்கு வாசகர்களை கதாபாத்திரங்களுடனான தொடர்பு இடைவிடாமல் நகர்வதும் தொடர்ந்து நிலைநிறுத்துவதும் கடினம். புத்தகம் சில நிதானங்களைக் காண்கிறது – துயரம் அடையும் அமைதியான கட்டங்களில் அல்லது அன்னியர் புரிந்துகொள்ள முடியாத நிலத்தில் வாழ்க்கையைக் குறிக்கும் வெற்று பேச்சுகள் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்கள் அவர்களின் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன.

“நான் கேள்விப்பட்ட குறிப்பிட்ட கொடூரங்களிலிருந்து விலகிச் சென்றேன். நான் அதிர்ச்சி, பயம், வருத்தம், சோகம் ஆகிய உணர்ச்சிகளின் வரம்பைப் பிரதிபலிக்க முயற்சித்தேன். பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்போது மக்களின் வலிமை, தயவு, அவர்களின் மென்மை ஆகியவற்றையும் பிரதிபலிக்க முயற்சித்தேன்” என்கிறார் பொல்லாக்.

போரிலிருந்து தப்பிய தமிழ் மக்களுக்கு, இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் கொஞ்சம் நீதி கிடைத்தது.   “ஒவ்வொரு மோதலையும் நினைவில் கொள்வது முக்கியம். அது கடந்த தலைமுறையினருக்கு கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள உதவுவது மட்டுமே. இந்த கருத்து உலகளாவிய அரசியலின் தற்போதைய நிலையைப் பொறுத்தவரை துன்பகரமானதாக தோன்றுகிறது. குறிப்பாக இங்கை முக்கியமானது. 10 ஆண்டுகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமான உனர்வும் நீதி பற்றிய நம்பகமான உணர்வும் இன்னும் இல்லை. அரசு தங்கள் மக்களிடம் காட்டும் மரியாதை இன்மை ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது” என்கிறார் டிக்ஸ்.

தங்களது அதிர்ச்சியை புரிந்துகொள்ளமுடியாத மற்றும் அறியப்படாத நாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரின் கடினமான வாழ்க்கையையும் வன்னி சுட்டிக்காட்டுகிறது. தப்பிப்பிழைத்தவர்கள் டிக்ஸ் மற்றும் பொல்லாக் ஆகியோரிடம், அந்த நாடுகளில் தஞ்சம் கோருவது போரைப் போலவே ஒரு திகில் என்று கூறினர். “புகலிடம் கோரும் சட்டங்கள், கலாச்சாரம் மற்றும் அதிகாரத்துவம் முற்றிலும் இதயமற்றவை. போரின் கொடூரத்திலிருந்து தப்பிய மக்களைப் பற்றி கேள்விப்பட்டோம்.” என்று பொல்லாக் கூறுகிறார்.

வன்னியின் பக்கங்களில், ஓவியர் சித்திரவதை மற்றும் போரிலிருந்து தப்பிய அன்டோனியின் அப்பட்டமான தனிமையை உருவாக்குகிறார். ஆனால், அவர் லண்டனில் வாழ்கிறார். அதே நேரத்தில் அவரது குடும்பம் தமிழ்நாட்டில் ஆபத்தில் வாழ்கிறது. “வெளிநாட்டில் தப்பிப்பிழைத்தவரின் அந்நியப்படுதலையும் அவநம்பிக்கையையும் தூண்ட முயற்சிக்க சில பக்கங்கள் மட்டுமே என்னிடம் இருந்தன. ஒரு விசித்திரமான தேசத்தில் அந்நியராக இருப்பது, பயங்கரமாக தனியாக இருப்பது. அன்புக்குரியவர்களின் பயம், அவர்களுக்கு உதவ இயலாமை, சிகிச்சையளிக்கப்படாத மன அழுத்த நோய் போன்றவை உயிர் பிழைத்தவருக்கு தோன்றக்கூடும். புரிந்துகொள்ள முடியாத காட்சி ஒழுங்கீனம் நிறைந்த வீதிகளில் ஊடுருவும் விளம்பரம், குழப்பமான அறிகுறிகள், எல்லா இடங்களிலும் பேசும் மக்கள் என உள்ளன. ஆனால், இதில் புரிந்து கொள்ள முடியாதவர்கள் யாரும் இல்லை. இறுதியாக, புகலிடம் தங்குமிடத்தின் வெறுமை. வெறுமையான அறை;அதில் தனிமை மற்றும் நினைவுகளைத் தவிர வேறொன்றுமில்லை. ஒரு சிறையைப் போல இல்லாமல் அன்டோனியின் வெறுமையான அறையின் படம். ஆகியவை இந்த புத்தகத்தில் எனது ஓவியங்கள் உள்ளன” என்று பொல்லாக் கூறுகிறார்.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanni a graphic novel that documents the horrors of sri lanka war

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express