Vanushi Walters becomes the first Sri Lankan born member of Parliament of New Zealand : நியூசிலாந்து நாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார் ஜெசிந்தா ஆர்டெர்ன். கொரோனா காலத்திலும், தீவிரவாதிகள் தாக்குதலின் போதும் இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் இவரது ஆட்சிக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்தது.
இந்த தேர்தல் முடிவுகளில், இலங்கையை பூர்வீகமாக கொண்ட மனித உரிமைகளுக்காக பாடுபடும் தமிழ் பெண் வனுஷி வால்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது வடமேற்கு ஆக்லாந்து பகுதியில் உள்ள அப்பர் ஹார்பர் தொகுதியில் போட்டியாளராக நின்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ஹாமில்ட்டன் கிரிக்கெட் வீரர் ஜேக் பெஸ்னட்.
ஆம்னாஸ்டி இண்டெர்நேசனல் வாரியத்தின் உறுப்பினராக பணியாற்றிய இவர் அடைந்துள்ள வெற்றியை தமிழ் சமூகம் கொண்டாடி வருகிறது. இவருக்கு வாழ்த்துகள் கூறும் விதமாக ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்ஷ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil