/tamil-ie/media/media_files/uploads/2018/04/3-32.jpg)
தென்னாப்பிரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் இரவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு திக் திக் அனுபவத்தை தருகிறது.
சிங்கம் என்றாலே காட்டிற்கு ராஜா. அதிக வல்லமை கொண்டது. எந்த ஒரு மிருகத்தையும் வேட்டையாடி உண்ணக் கூடியது என்று நாம் சிறு வயதில் கேட்டிருப்போம். ஆனால் தென்னாப்பிரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் 7 சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு முள்ளம்பன்றியை வேட்டையாட முடியாமல் தவித்தது பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உருவத்தில் சிறியதாக இருந்தாலும், முள்ளம்பன்றியின் உடலின் இருக்கும் முட்கள் தான் அதற்கு, கர்ணனின் கவச குண்டலம் மாதிரி. அதை வைத்துக் கொண்டு முள்ளம் பன்றியால் சிங்கம் மட்டுமில்லை புலி, யானை என கொடிய விலங்குகளிடம் இருந்து ஈஸியாக தப்பித்துக் கொள்ள முடியும்.
பூங்காவில் இரவு நேரத்தில், வேட்டையாட வந்த 7 சிங்கங்கள் முள்ளம் பன்றியை பார்த்து அதை சுற்றிவளைக்கின்றன, ஆனால், அவர்களிடம் சிக்காமல் முள்ளம் பன்றி, அவர்களிடம் அசால்ட்டாக தப்பிக்கிறது. எவ்வளவு முயன்றாலும் அந்த 7 சிங்கத்தால் முள்ளம் பன்றியை நெருங்க கூட முடியவில்லை. கடைசியில், 7 சிங்கங்களும் அங்கிருந்து நகர்ந்து செல்கின்றன.
இந்தக் காட்சியை தொலைவில் இருந்தப்படியே சிலர் செல்ஃபோன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில், ஹைலைட் என்னவென்றால் அந்த 7 சிங்கங்களுக் ஆண் சிங்கள் ஆகும்.
https://www.youtube.com/watch?time_continue=92&v=Y3RQYgdi780
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.