New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/05/golden-8.jpg)
ஈரானில் பிரபல மால் ஒன்றில், ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் போல் உள்ளூர் நடிகர்கள் உடை அணிந்து வந்து மிரட்டிய சம்பவம் இணையத்தில் விடியோவாக வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டில் உள்ள புகழ் பெற்ற மால் ஒன்றில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். அந்த மாலில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம், பார்வையாளர்களை கவரும் வகையில் இன்ப அதிர்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
உள்ளூர் நடிகர்களை ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளை போல் வேடமிட்டு வந்து, அங்கிருக்கும் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்க சொல்லியுள்ளனர். இதே போல் அந்த நடிகர்களும் நீண்ட தாடிகள், கையில் டம்மி துப்பாக்கி, கத்தியுடன் வந்து பொதுமக்களை மிரட்டியுள்ளனர்.
https://www.instagram.com/p/BievB6tF-Pb/?taken-by=pedram_firuzi
இதைப் பார்த்த மக்கள், பலரும் உண்மையாகவே தீவிரவாதிகள் நுழைந்து விட்டனர் என நினைத்து, உயிரை காப்பாற்றிக் கொள்ள தெறித்து ஓடுகிறார்கள். மற்ற சிலர் போலீஸுக்கு தகவல் கொடுக்கின்றனர். ஆனால், இது ப்ரேன்ங் என்று தெரிந்த மால் ஊழியர்கள் அவர்களை பார்த்து பயப்படாமல் சிரித்தே காட்டிக் கொடுகின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பார்ப்பவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.