எதிரியை பழி வாங்க மோசமான செயல்: சூப்பில் சிறுநீர் கழித்த ஹோட்டல் முதலாளி!

கெட்ட வாடை வீசியதால் ஊழியர்கள் சூப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் கடைக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

கெட்ட வாடை வீசியதால் ஊழியர்கள் சூப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் கடைக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எதிரியை பழி வாங்க மோசமான செயல்:  சூப்பில் சிறுநீர் கழித்த ஹோட்டல் முதலாளி!

சீனாவில் உள்ள பிரபல  ஹோட்டல் முதலாளி ஒருவர், தனது  எதிரியான பக்கத்து ஹோட்டல் முதலாளியை பழிவாங்க அவரின்  உணவில் சிறுநீர்  கழிக்கும் செயல் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

Advertisment

ஓரு தெருவில்  இரண்டு ஹோட்டல்கள் இருந்தால்  எந்த கடையில் ருசி அதிகமாக இருக்குமோ, எந்த கடையில்  விலை  நம் பட்ஜெட்டில் அடங்குமோ அந்த கடையைப் பார்த்து தான் வாடிக்கையாளர்கள் செல்வார்கள். இது எல்லா கடைகளிலும் நடப்பது வழக்கம் தான்.

ஆனால். சீனாவில் உள்ள ஹோட்டல் முதலாளி ஒருவர், தனது ஹோட்டலுக்கு அருகில் இருக்கும், மற்றொரு ஹோட்டலுக்கு அதிகப்படியான கஸ்டமர்கள் செல்வதை பொறுத்துக் கொள்ள  முடியாமல் அனைவரும் முகம் சுளிக்கும் படியான காரியத்தை செய்துள்ளார்.

சீனாவின் பெரும்பாலான உணவகங்களில் சூப் ரொம்பவே ஃபேமஸ்.  அதுவும், மாட்டிறைச்சியில் செய்யப்படும் சூப்பை சீனா மக்கள் பெரும்பாலும் விரும்பி உண்பார்கள்.  அந்த வகையில்,   சீனாவின் பிரதான சாலையில் உள்ள  ’டாங்கிபை’ என்ற  உணவகத்தில் தயாரிக்கப்படும் சூப்பை ருசிப் பார்ப்பதற்காகவே நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளன.

Advertisment
Advertisements

இதைப் பார்த்து   பொறாமை அடைந்த பக்கத்து ஹோட்டல் முதலாளி, இரவோடு இரவாக அவர்கள் தயாரிக்கும் சூப்பில் கண்டவறை கலந்து அந்த ஹோட்டலில் நற்பெயரை  கெடுக்க திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி,  கடந்த  ஏபரல் 3 ஆம் தேதி,  அந்த உணவகத்திற்கு சென்று, அவர்கள் காலை தயாரிக்க வைத்திருக்கும் சூப் கலவையில்  அளவில்லாத உப்பு, காரத்தை கலந்துள்ளார்.

அத்துடன், பொறாமையின் உச்சக்கட்டமாக சூப்பில் சிறுநீரும் கழித்துள்ளார்.  இந்த காட்ச்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன. மறுநாள் காலை சூப்பில் இருந்து  கெட்ட வாடை வீசியதால் ஊழியர்கள் சூப்பை  வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் கடைக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

அதன் பின்பு, சிசிடிவி கேமிராவை ஆராய்ந்த போது,  பக்கத்து ஹோட்டல் முதலாளி செய்த முகம் சுளிக்கும் செயல் அம்பல்மாகியுள்ளது.

 

 

 

Viral China Cctv Footage

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: