ராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ரம்ப்!

ராணி 10 நிமிடம் வெயிலில் காத்திருந்து அவரை வரவேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தை  சந்திக்க சென்ற  அமெரிக்க அதிபர்  டொனால்டு ட்ரம்ப்  ராணியை தொடர்ந்து அவமதிக்கும் நோக்கத்தில் நடந்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்களின் நாயகனாகிய அமெரிக்க அதிபர் ட்ர்ம்ப் எங்கு சென்றாலும் அந்த இடத்தில் பிரச்சனையை  ஏற்படுத்தி  விமர்சனத்திற்கு உள்ளாவதை வழக்கமாக  வைத்திருக்கிறார்.  தெரிந்தோ, தெரியாமலோ ட்ரம்ப்  செய்யும் செயல்கள் மக்களின் எதிர்பார்ப்பை அதிகம் சம்பாதித்தி விடுகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ட்ரம்ப், இங்கிலாந்து ராணியை  நேரில் சந்தித்த போது அந்நாட்டின் விதிமுறையை துளியளவும் கண்டுக் கொள்ளாமல்  தனக்கே உரிதான பாணியில் நடந்துக் கொண்டது  லண்டன் மக்களின் வெறுப்பை பெற்றுள்ளது.  ட்ரம்பின் செயலை அந்நாட்டு மக்கள் பலரும்  சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

நேற்றைய தினம்,  ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனிய ஆகியோர் பிரிட்டன் பக்கிங்ஹம் அரண்மனை சென்று ராணி எலிசபெத்தை சந்தித்தனர். அப்போது ட்ரம்ப் வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் எதையுமே  பின்பற்றாமல் நடந்துக் கொண்டார்.

ராணியை  சந்திக்க வரும் அரசியல் தலைவர்கள் எந்த ஒரு சந்திப்பின் போது முன்கூட்டியே வந்து விடுவார்கள். ஆனால் ட்ரம்ப்  வழக்கம் போல் 10 நிமிடம்  காலதாமதமாக அரண்மனைக்கு வந்தார்.  இதனால் ராணி 10 நிமிடம் வெயிலில் காத்திருந்து அவரை வரவேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து, ராணியை சந்திக்க வரும்போது முதலில் அவர்கள் தான் கைகொடுக்க வேண்டும். ஆனால் ட்ரம்ப் கை கொடுக்காத காரணத்தால், காத்திருந்து பின் ராணியே முன்வந்து கை கொடுத்தார்.  இதையும் தாண்டி ட்ரம்ப்  இறுதியில் செய்த செயல்  அரண்மனையின் காவலர்கள் உட்பட அனைவருக்கும் அதிகப்படியன கோபத்தை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு படையினர் ட்ரம்புக்கு மரியாதை செலுத்தினர் அப்போது பாதுகாவலர்கள் அணிவகுத்து நிற்க, தலைவர்கள் நடந்து செல்ல வேண்டும். இந்த மரியாதையில் ராணி முன் செல்வது தான் வழக்கம். ஆனால் ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாமல் ராணியை முந்திக்கொண்டு நடந்து சென்றார். இடது பக்கமாக வாருங்கள் என ராணி செய்கையால் தெரிவித்தும் அது ட்ரம்புக்கு புரியவில்லை. ட்ரம்பின் இந்த செயல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதுவரை ராணி நடந்து செல்லும்போது அவரது கணவர் பிலிப் கூட ஒரு அடி பின்னே நடந்து சென்றது தான் வழக்கம். ஆனால் ட்ரம்ப்  முதன்முறையாக அவரையே முந்திக் கொண்டு நடந்தது அந்நாட்டு மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது,.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close