சீனாவில், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க கற்று தரும் டிரைவில் ஸ்கூல் ஒன்று புதுமையான முறையை கையாண்டு வருகிறது.
சீனாவில் டீஜோ பகுதியில் உள்ள புகழ்பெற்ற டிரைவி ஸ்கூல் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பயற்சி பெற நபர்கள் அனைவரும் கட்டாயமாக தங்களின் ஐபோன்களை கொண்டு வர வேண்டும். ஏனென்றால், அவர் வாகனம் ஓட்டி பயிற்சி செய்யும் போது சாலையின் இருபுறமும் அவர்களின் ஐபோன்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்படும்.
அதன் ஃபோன்களுக்கு எந்த சேதாரமும் வராதவாறு இவர்கள் ஒழுங்காக வண்டியை ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்கள் தங்களின் உயிரைக் காட்டிலும் மேலாக நினைப்பது ஸ்மார்ட்ட்ஃபோன்களை தான். எனவே, தான் இந்த டிரைவிங் ஸ்கூலின் மேலாளர் இந்த புதிய முறையை கையாண்டு வருகிறார்.
அதே போல், இந்த டிரைவில் ஸ்கூலில் பயிற்சி பெற்று செல்பவர்கள் தான் முதலிக் லைசன்ஸ் பெறுகிறார்களாம். அவ்வளவு சிறப்பாக இங்குள்ளவர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இதன் காரணமாகவே பெரும்பாலானோர் இங்கு பயிற்சி பெற வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல், ஒருவர் வண்டி ஓட்டும் போது அவரின் செல்ஃபோன்கள் மட்டும் தரையில் வைக்கப்படதாம். மற்ற அனைவரின் செல்ஃபோன்கள் வரிசையாக வைக்கப்படுமாம். மற்றவர்களின் ஃபோன்களுக்கு எந்த வித சேதாரமும் வராதவாறு அவர்கள் வண்டியை இயற்ற வேண்டும்.
https://www.youtube.com/watch?time_continue=55&v=o3NzW8RH4r0