சீனாவில் குடி போதையில் ஒருவர் கொடூரமான முறையில் காரை ஒட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய வீடியோ அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளிலும் குடிபோதையில் கார் ஓட்டும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் நூற்றுக்கு 80 சதவீதம் விபத்துக்கள் குடி போதையில் இருந்தவர்களால் நிகழ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இதுக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டு அரசு சமீபத்தில் நடந்த விபத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சீனாவின் பிரதான சாலையில் அதி வேகமாக வரும் கார் தடுப்புச் சுவர் மீது கொடூரமான முறையில் மோதி விபத்துக்குள்ளாகிறது.
இந்த காருக்கு முன்னாடி இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த நபர் இந்த விபத்தில் இருந்து ஜஸ்ட் மிஸ் போல் தப்பிக்கிறார். அவர் ஹெல்மேட் அணிந்திருந்த காரணத்தினால் அவரின் உயிர் தப்பிக்கிறது. விபத்துக்குள்ளான காரிலிருந்து சிறிய காயங்களுடன் வெளிவந்த நபர், குடி போதையில் தனக்கு என்ன நடந்தது என்பதுக் கூட தெரியாமல் தள்ளாடுகிறார்.
உடனடியாக , அவரை கைது செய்த போலீசார் அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தற்காக அவரிடம் அபராதம் வசூலித்து அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தனர்.
https://www.youtube.com/watch?time_continue=58&v=bAmvcDsRca4