கடுமையான பனியினால் பேருந்தின் மீது இடிந்து விழுந்த பில்லர்: காயமின்றி ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்!

பேருந்தின் மீது பில்லர் இரண்டாக இடிந்து விழுகிறது. அதிர்ச்சியில் பேருந்தின் ஓட்டுநர் செய்வதறியாமல் அப்படியே நிற்கிறார்.

By: March 9, 2018, 11:56:49 AM

சீனாவில் கடுமையான பனியின் காரணமாக, ஏர்போர்டில் இருக்கும் தூண் ஒன்று, பேருந்தின் மீது இடிந்து விழும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

சீனாவின் பெரும்பாலான  இடங்களில் தற்போது கடுமையான பனி மற்றும் மழைப் பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பலர்,  வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில், கடுமையான பனி மற்றும் மழை காரணமாக ரோட்டில் இருக்கும் பில்லர் ஒன்று பேருந்தின் மீது இடிந்து விழுந்துள்ளது.

அங்குள்ள இன்டர்நெஷனல் ஏர்போர்டிற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வழியே சென்ற பேருந்து சாலையை பொறுமையாக கடக்கிறது. அப்போது அசூர வேகத்தில் அந்த பேருந்தின் மீது பில்லர் இரண்டாக இடிந்து விழுகிறது. அதிர்ச்சியில் பேருந்தின் ஓட்டுநர் செய்வதறியாமல் அப்படியே நிற்கிறார்.

இந்த காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. கடந்த 5 ஆம் தேதி இந்நிகழ்வு நடந்துள்ளது. ஆனால் அதிர்ஷடவசமாக பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏது ஏற்படவில்லை. அதே போல் பெருந்து ஓட்டுநரும்  சிறு காயமின்றி உயிர்ப்பிழைத்துள்ளார். இந்த வீடியோ அங்குள்ள சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Video due to heavy wind pillar breaks and falls on moving bus damages it severely

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X