சீனாவில் 8 ஆவது மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைப்பு வீரர் ஒருவர், காலால் எட்டி உதைத்து அவரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சீனாவில், நான்சிங் நகரத்தில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி இளம்பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் குடி இருந்த 11 அடுக்குமாடி கட்டத்தின் 8 ஆவது தளத்தில் இருந்தப்படி கீழே குதிப்பதாக தெரிவித்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தனது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாகவும், இனிமேல் இந்த குடும்பத்தில் வாழ முடியாது என்று அழுதப்படியே அந்த பெண் ஜன்னல் வழியாக குதிக்க முயற்சித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு, விரைந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பெண்ணை சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
பின்பு, அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்லவும் முயற்சித்தனர். ஆனால் அவர், வீட்டை உட்பக்கமாக பூட்டி இருந்தார். இந்த நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர் ஒருவர், கயிறு வழியாக அந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து, அந்த பெண் அமர்ந்திருக்கும் ஜன்னல் வழியாக வந்து, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்ற முயற்சித்தார்.
சுமார், 2 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் பேசியும் அந்த பெண் கேட்காததால், தீயணைப்பு வீரர் ஒருவர், அந்த பெண் அமர்ந்திருக்கும் ஜன்னல் வழியே அவரை ஓங்கி உதைத்தார். இதனால், அந்த பெண் தவறி தனது அறைக்குளே விழுந்தார். அதற்குள் மற்ற தீயணைப்பு வீரர்கள் அவரின் வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அவரை காப்பாற்றினர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் செல்ஃபோனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.அதுமட்டுமில்லாமல், பெண்ணை காப்பாற்றிய இளைஞருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
https://www.youtube.com/watch?time_continue=7&v=6r3MgIExud0