By: WebDesk
Updated: November 20, 2019, 02:53:20 PM
இந்தோனேஷியாவில் காணமல் போன பெண்ணின் சடலத்தை 23 அடி நீள மலைப்பாம்பின் உடலின் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காண்போரை பதற வைத்துள்ளது.
இந்தோனேஷியாவில் பழங்குடியினர் வசித்து வரும் பகுதியில் 54 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு காணமல் போனார். அந்த பகுதி மக்கள் அனைவரும் அரை தொடர்ந்து தேடி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில் இருக்கும் காய்கறி தோட்டம் ஒன்றில் 23 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று பெரிய வயிறுடன் நகர முடியாமல் அந்த பகுதியில் வந்து ஒதுங்கியுள்ளது.
இதை பார்த்த பொதுமக்கள் ,மலைப்பாம்பை கொன்று அதன் வயிற்றை கிழித்துள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்துள்ளது. அந்த பாம்[பின் வயிற்றில் காணமல் போன பெண்னின் உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்த மக்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அழுதப்படியே அந்த பெண்ணில் உடலை பாம்பின் வயிற்றில் இருந்து எடுத்து இறுதி சடங்கு செய்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் மலைப்பகுதியில் அதிகப்படியான மலைப்பாம்பு சுற்றி வருவதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் பதற்றத்துடனே வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள், பெண்கள் மலைப்பாம்பின் அச்சத்தால் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சப்பட்டு இருக்கின்றன.