/tamil-ie/media/media_files/uploads/2018/06/2-22.jpg)
சீனா மெட்ரோவில் பயணித்த முதியவர் ஒருவர், தனக்கு இருக்கையில் அமர இடம் தராத பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாள் தோறும் கூட்டம் நெரிசலான மெட்ரோ, பேருந்து, ஷேர் ஆட்டோவில் செல்பவர்கள் பல பிரச்சனைகளை சந்திப்பது வழக்கமான ஒன்று. வேலைக்கு சென்று வரும் பலரும் பஸ், ரயிலில் ஏறியதும் அமர இடம் இருக்கிறதா? என்றே பார்ப்பார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் நீண்ட தூரம் பயணிப்பதாக இருக்கலாம் அல்லது உடல் நிலை, வேலை செய்துவிட்டு சோர்வாக வருவதாலும் ஏறீய உடனே சீட்டில் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கலாம்.
ஆனால் இந்த இடத்திற்காக வரும் சண்டைகள் இருக்கே..அது குழாய் அடி சண்டை போல் சில சமயங்களில் கைகளப்பிலும் முடியும் இப்படி தான் சீனாவில் தனது இடம் தராத பெண்ணை முதியவர் ஒருவர் கோபத்தில் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். சீனாவில் பிரபல மெட்ரோ ஒன்றில் பயணித்த பெரியவர் ஒருவர் ஸ்டேஷனில் ஏறியதும், அங்கிருந்த பெண் ஒருவரிடம் இருக்கையில் அமர இடம் கேட்டுள்ளார்.
This old slapper is taking heat online in China! pic.twitter.com/SiATxmxm8d
— RT (@RT_com) 18 June 2018
அதற்கு அந்த பெண் பெரியவர் என்றுக் கூட பாராமல் திமிராக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த முதியவர் கோபத்தில் பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். பதிலுக்கு அந்த பெண்ணும் முதியவரை தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்த்கை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் பெண்ணை அடித்தது தவறு என்று விமர்சித்துள்ளனர். அதே நேரத்தில் நெட்டிசன்கள், திமிராக பேசிய ஆண்டிக்கு தாத்தா கொடுத்த பதிலடியே சரி என்று விமர்சித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.