எங்காகிலும் பார்த்ததுண்டோ... மோடி அமர நாற்காலியை நகர்த்திய அதிபர் டிரம்ப் - வீடியோ!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடி அமர அமெரிக்க அதிபர் டிரம்ப் நாற்காலியை நகர்த்தினார். மோடி நாற்காலியில் அமர்ந்து இருக்க அவருக்கு பின்புறமாக டிரம்ப் நின்று கொண்டிருந்தார்.
பிரதமர் மோடி அமர அமெரிக்க அதிபர் டிரம்ப் நாற்காலியை நகர்த்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 10 ஆம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரீசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றடைந்தார். அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்றனர். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சந்தித்தார்.
Advertisment
Advertisements
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜனாதிபதி டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு 'Our Journey Together' என்ற புத்தகத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடி அமர அமெரிக்க அதிபர் டிரம்ப் நாற்காலியை நகர்த்தினார். மோடி நாற்காலியில் அமர்ந்து இருக்க அவருக்கு பின்புறமாக டிரம்ப் நின்று கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
VIDEO | PM Modi (@narendramodi) meets US President Donald Trump (@realDonaldTrump) at White House in Washington, DC.